பிரதமர் மோடி ஐநா பொருளாதார சமூக கவுன்சில் இன்று காலை சிறப்புரையாற்றுகிறார்
கொரோனா தொற்றினால் சர்வதேச சமூகம் மிகப்பெரிய இடர்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருகின்ற இந்த நேரத்தில் பன்முகத்தன்மை இணை வளர்த்தெடுக்க ஐநா முயற்சிசெய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் கருத்து மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஐனா சபை உருவாகி எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தியாவின் கருத்து எப்படி இருக்கும் என்பதை உலகின் பெருவாரியான நாடுகளின் உறுப்பினர்கள் கேட்கப் போகின்றன.
ஐநா சபையின் 2021 – 22 ஆண்டுக்கான ஐநா சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பின் பிரதமர் மோடி முதல் முறையாக பெருவாரியான உறுப்பினர்கள் மத்தியில் பேசப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு பின்னர் பன்முகத்தன்மை 75 ஆவது ஆண்டில் எத்தகைய ஐநாசபை நமக்குத் தேவைப்படுகின்றன என்பதே பேசும் பொருளாகும். இந்த தலைப்பில் தான் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார் என தெரிவித்துள்ளனர்.
பொது சமூகம் மற்றும் கல்வியாளர்களின் பிரதிநிதிகள் என்ன சமூகத்தின் பல்வேறு மட்டங்கள் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்டக்குழு கூட்டம் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் அரசு தனியார்துறை, பொது சமூகம், கல்வியாளர்கள், பிரதிநிதிகள் என சமூகத்தின் பல்வேறு மட்டங்ககளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.