பிஎம் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறித்து மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 2014 முதல் மொத்தம் ரூபாய் 2021 கோடியை அரசாங்கம் செலவு செய்துள்ளதாக 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் அப்போதைய வெளியுறவுத்துறை விகே.சிங் மாநிலங்களவைக்கு அறிவித்து இருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அந்த நேரம் வரை 48 வெளிநாட்டு பயணங்களில் 55 நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார். பிரதம அமைச்சர் இதன் பின்னர் மேலும் 11 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். பிஎம் இந்தியா இணையத்தளத்தில் கிடைத்த தகவல்களின்படி, கடைசியாக 2019 நவம்பர் பிரேசில் பயணம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட செலவினங்களுக்கு வெளியுறவு துறை வழங்கிய மற்றொரு பதிலும் உள்ளன. இது அமைச்சகத்தின் சமீபத்திய பதிலுக்கு முற்றிலும் மாறாக உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 517 கோடி ரூபாய் செலவானது என்று நேற்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளன.
ஆனால் இதற்கு முன்பே 2018ல் பதில் அளித்த போது 2021 கோடி செலவானது என்றும், இந்த மார்ச் மாதம் பதில் அளித்த போது 446 .52 கோடி செலவானது என்றும், இரு வேறு விதமான செலவு கணக்குகளை வழங்கியுள்ளது. வெளியுறவுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அவ்வபோது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மற்றும் அதன் செலவுகள் குறித்த கேள்வி தான் இவை. தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி பவுசியா கான் 2015 முதல் பிரதமர் நரேந்திர மோடி எத்தனை நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். அந்த வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் என்ன? என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி 2015 முதல் 58 நாடுகளுக்கு பயணம் செய்ததாக வெளியுறவு அமைச்சகம் நேற்று பதிலளித்தனர். இதனால் அரசாங்கத்திற்கு ரூபாய் 517. 82 கோடி செலவாகியுள்ளது என்றும், அமைச்சர் வி.முரளிதரன் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவையில் இதே போன்று கேள்விக்கு முரளிதரன் பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செலவினங்களுக்காக வேறுபட்ட புள்ளிவிபரத்தை முன்வைத்திருந்தார்.
மார்ச் மாதம் பாராளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வின் போது கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து அரசாங்கம் செய்த செலவினங்களை முரளிதரன் விரிவாக வழங்கினார். ஒட்டு மொத்த செலவினங்கள் ரூபாய் 446.52 கோடி என்றும், 2015-16 வரை ரூபாய்.121.85 கோடி, 2016 -17 ரூபாய்.78.52 கோடி, 2017-18 ரூபாய்.99 கோடி, 2018-19 ரூபாய். 100.2 கோடி, 2019 ரூபாய். 46.23 கோடி என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி இந்த ஆண்டு எந்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு வருகைக்கான செலவு 571 புள்ளி 82 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது மார்ச் மாதம் அறிவித்த தொகையை விட ரூபாய் 125.30 கோடி அதிகமாகும்.