பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் தோனி
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களை உங்களது அபாரமான ஆட்டத்தால் ஈர்த்து வந்தவர். நீங்கள் உங்களது டிரேட்மார்க் ஸ்டைலில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளீர்கள்.
இந்தியாவுக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்தவர் நீங்கள். உங்களது ஹேர் ஸ்டைல், ஆட்டம், அமைதியான நடைமுறை என அனைத்தும் எல்லோருக்கும் பிடிக்கும்.
உங்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தோனிக்கு இரண்டு பக்க வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தோனிக்கு பிரபலங்கள் துவங்கி சாமானியர்கள் வரை பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் கிரிக்கெட் வீரர் தோனிக்கு இரண்டு பக்க வாழ்த்து செய்தியை இவ்வாறு அனுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த சனிக்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பக்க வாழ்த்து செய்தி அனுப்பிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் தோனி. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் அனுப்பிய அந்த வாழ்த்து மடலை ட்விட்டரில் பகிர்ந்த தோனி.
கலைஞன், ராணுவ வீரர் மற்றும் விளையாட்டு வீரர் போன்றவர்கள் எப்போதுமே விரும்புவது அவர்களது கடின உழைப்பிற்கும், அற்பணிபிற்க்கும் மக்கள் எல்லோரிடமிருந்தும் கிடைக்கின்ற பாராட்டுகளை தான். என்னை வாழ்த்தியமைக்கும், பாராட்டியமைக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.