இந்திய அரசின் ஆன்லைன் பிஎம் இ வித்யா திட்டம் தெரியுங்களா!
இந்தியாவில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் பெருமளவில் மூடப்பட்டு மாணவர்கள் கல்விகற்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்கும் விதமாக நாட்டில் ஆன்லைன் சேவைகள் மூலமாக கல்வி வழங்க அரசு ஏற்பாடுகளை நடத்தி வருகின்றது.
பிஎம் இ வித்யா:
பிஎம் இ வித்யா மூலம் டிஜிட்டல் ஆன்லைன் கல்வி திட்டமொன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் 1 முதல் 12ம் வகுப்புவரை தனித்தனியாக 12 டிவி சேனல்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரே நாடு ஒரே செயல்:
ஒரே நாடு ஒரே செயல் திட்டத்தின் கீழ் இத்திட்டமானது செயல்படும் மேலும் செவித்திறன் பார்வைதிறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கான இ புக் ஒன்றை அரசு உருவாக்கித் தரும் உயர் படிப்புக்காக பல்கலைக்கழகங்களில் மே 30 லிருந்து முதல் 100 இடங்களை ஆன்லைன் படிப்புகளாக தொடங்கும்.
அரசு அனுமதி வழங்கும் மேலும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல் டாட்டா ஸ்கை டிடிஎச் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் சேவையில் நான்கு மணி நேரத்தில் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கவேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2025ல் மாணவர்கள் தங்களுடைய கல்வியறிவில் சிறந்து விளங்க அவர்களுக்கான உரிய கட்டளை பெறுவதற்கு தேசிய அடிப்படை நிலை எழுத்தறிவு மற்றும் என் அறிவு இலட்சிய நோக்கு திட்டம் மூலம் 2020ஆம் ஆண்டுக்குள் தொடங்க அரசு முன்னெடுத்து வருகின்றது.
இந்த ஆன்லைன் கல்வியை நாம் முழுமையாக பயன்படுத்தி இதன் பயனைப் பெறலாம். இ கல்வித் திட்டம் என்பது கொரானா போன்ற இக்கட்டக்காலத்தில் ஊரடங்கில் நாம் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்து தேவைப்படும் கல்வி அறிவை நாம் முழுமையாக பெறலாம்.