சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ப்ளம் கேக் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

கேக் என்றாலே குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். க்ரீம் இல்லாத ப்ளம் கேக் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். கிறிஸ்துமஸ் நாட்களில் வீட்டில் கேக் செய்வது வழக்கம். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய ப்ளம் கேக் செய்யலாம் வாங்க.

  • கிறிஸ்துமஸ் நாட்களில் வீட்டில் கேக் செய்வது வழக்கம்.
  • கேக் என்றாலே குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.
  • குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய ப்ளம் கேக்.

ப்ளம் கேக்

மைதா 100 கிராம், சர்க்கரை 200 கிராம், முட்டை 3, பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன், வெண்ணை 200 கிராம், டூட்டி ஃப்ரூட்டி கால் கப், கேரமல் சர்க்கரைப் பாகு 200 கிராம், மிக்ஸ்டு ட்ரை ஃப்ரூட் தேவையான அளவு, ஏலக்காய், பட்டை, கிராம்பு சம அளவு, ஜாதிக்காய் பொடி சிறிது, வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன், முந்திரி தேவையான அளவு.

செய்முறை விளக்கம்

ஒரு பாத்திரத்தில் வெண்ணையை எடுத்துக் கொண்டு ஹேண்ட் பீட்டர் பயன்படுத்தி ஐந்து நிமிடங்கள் அடித்து வைக்கவும். பிறகு பொடித்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் முட்டைகளை கலந்து ஹாண்ட் பீட்டரால் நன்றாக அடித்து விடவும்.

பிறகு மைதா மாவு, பேக்கிங் பவுடர் இரண்டையும் சலித்து இந்த கலவையில் சேர்த்து கலக்கவும். ஐந்து மசாலாப் பொருட்களை பொடி செய்து சலித்து சேர்த்து விடவும். மிக்ஸ்டு ஃப்ரூட் மாவில் சேர்ப்பதற்கு முன்பாக சர்க்கரைப் பாகில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு மாவில் சேர்க்க வேண்டும்.

டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இந்த கலவையை ஒரு கேக் ட்ரேயில் பேக்கிங் பேப்பரை வைத்து வெண்ணை தடவி, இந்த கலவையை ஊற்றி மேல் உடைத்த முந்திரியை சேர்த்து வைக்கவும்.

முப்பது டிகிரி செல்சியஸில் அவனில் வைத்து ஒரு மணி நேரம் வேக வைத்து எடுக்கவும். பிறகு கேக் ட்ரேயில் இருந்து எடுத்து ஆறவிட்டு சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான சுவையான ப்ளம் கேக் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *