பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன ?
சில நாட்களாகவே இந்த பிளாஸ்மா சிகிச்சை ரொம்ப ஃபேமஸ்! ட்ரெண்டிங்ல இருக்கு!
அது என்ன பிளாஸ்மா சிகிச்சை?
இது கொரோனா நோய்க்கு முழுமையான தீர்வாகுமா என்பதை பற்றிதான் இந்த கட்டுரையில் பார்க்க போறோம்.
ரொம்ப நாட்களாக இருக்கிற ஒரு சிகிச்சை முறைதான் இந்த
“ பிளாஸ்மா “
அதாவது இந்த ஆட்கொல்லி நோய்கள் காலரா , டயேறியா , போன்ற நோய்களுக்கே பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்பட்டதுனு தான் சொல்றாங்க.
ஒரு நோயுற்றவர் இருக்காரு அவருக்கு வந்த நோய் குணமாகனும் அப்படின்னா நாம சாப்பிடுற மருந்து மூலமாகவோ இல்ல சாதாரணமா உடம்பில் இருக்குற எதிர்ப்பு சக்தி மூலமாக தான் ஒருத்தரோட வியாதி குணமாகும்.
ரத்த நாளங்கள் அந்த நோயை எதிர்த்து ஒரு படலத்தை பரப்பும் அந்தப் படலம்தான் வந்த நோயை எதிர்த்து போராடி நோய் வாய்ப்பட்டவரை குணப்படுத்தும்.
அந்தப்படலம் தான் பிளாஸ்மா .என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
நம் ரத்தத்தில் மூன்று பிரிவு இருக்கு அதாவது நம்ம ரத்ததானம் பண்ணும்போது சிகப்பு அணுக்கள் , வெள்ளை அணுக்கள் அதுக்கப்புறம் பிளாஸ்மா அப்படின்னு பிரிச்சு வெப்பாங்க.
( பிளாஸ்மா அப்படிங்கறது ஒரு நிறமற்ற மண்டலம் ஒரு பிரிவு அப்படின்னு கூட சொல்லலாம். )
இந்த பிளாஸ்மா எப்படி கொரோனாவுக்கு மருத்துவமாக கொடுக்க முடிவு செஞ்சு இருக்காங்க ?
ஏற்கனவே இந்த கொரோன நோய் வந்து குணமாகி இருக்கிறவங்களோட உடலில் இருந்து அந்த பிளாஸ்மாவை எடுத்து அதை நோய்த்தொற்று இருப்பவர்களுக்கு ( அதிக வயது இருக்கிறவங்க) டிரீட்மென்ட் கொடுக்கலாம் அப்படின்னு முடிவு செஞ்சு இருக்காங்க.
ஆனா கொரோனா வந்தவங்க உடம்பிலிருந்து பிளாஸ்மாவ எடுத்துட்டா திரும்பவருமா ? வருமா வராதா? அப்படிங்கிற கேள்வியை இரண்டு மூணு நாளா பெரிய சர்ச்சையா போய்கிட்டு இருக்கு .
இதற்க்கு மருத்துவர்கள் ஒரு தீர்வு சொல்லி இருக்காங்க “அதாவது கொரோனா நோயில் இருந்து குணமானவர்களை 15 நாளில் இருந்து ஒரு மாசம் வரைக்கும் சரி பார்த்துட்டு , அவர்களுக்கு திரும்ப கொரோனா வரலைன்னா தான் பிளாஸ்மா எடுப்போம் அப்படின்னு சொல்லி இருக்காங்க “ .
இது நிரந்திர தீர்வு அல்ல , இன்னும் சோதனை முயறிச்சியில் தான் இருக்கு. ஆனா அதைப் பத்தின வதந்திகள் ஊரு பூரா பரவி கிடக்கு!
இந்த நம்மளோட முக்கியமான கடமை அரசுக்கு இசையனும் , சட்டத்த மதிக்கணும் , முக்கியமா வதந்திகளை பரப்பரத அறவே தவிர்க்கணும்.
ஏதாவது சிகிச்சை கண்டுபிடிச்சு இந்த வியாதியை தீர்த்து வச்சுட்டா போதும்னு தான் தோணுது!
உலகப் போரை விட இந்த நோய் அதிக பாதிப்பை ஏர்ப்படுத்திவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் !
எப்பிடியாவது இதுக்கு ஒரு தீர்வு வந்தா போதும் சாமி ….
எல்லாரும் நல்லா இருக்கணும்!!