பெண்களுக்காக உருமாறிய பிங்க் நிற பேருந்துகள்
பிங்க் நிற பேருந்துகளில் இலவசமாக பெண்கள் இனி குழப்பம் அடையாமல் பயணிக்கலாம் போக்குவரத்து துறை அதிரடி முடிவு…
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவிக்கு வரும் முன் தனது தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு இலவச பேருந்து என்ற திட்டத்தை அறிவித்து இருந்தார். அவர் சொன்னபடியே முதலமைச்சராக பதவியேற்றதும் முதல் கட்டமாக பெண்களுக்கு இலவச பேருந்து என்ற திட்டத்தை அமல்படுத்தினார் இந்நிலையில் சாதாரண பேருந்துகளில் முகப்பில் வெள்ளை நிற போர்டு போட்ட பேருந்துகள் பெண்களுக்கான இலவச பேருந்து என்று இருந்தது . ஆனாலும் ஒரு சில பெண்களுக்கு இது தெரியாததால் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் அவசரமாக செல்லும் பொழுது ஏறி விடுகின்றனர். இது பெரும் சிரமமாக பெண்களுக்கு இருந்தது.
பல பெண்கள் இந்த இலவச பேருந்தை நம்பியே தினமும் வேலைக்கு அல்லது வெளியிலும் சென்று வருகின்றனர். இந்த குழப்பத்தின் காரணமாக பல பெண்களின் நிலைமை மோசமாக இருந்தது எனவே இதனை மாற்று மதமாக போக்குவரத்து துறை ஒரு அதிரடி முடிவை எடுத்து உள்ளது.முதல் கட்டமாக 60 பேருந்துகளுக்கு முகப்பில் பிங்க் நிற வர்ணம் பூசி நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே இனி பெண்கள் குழப்பம் அடையாமல் சென்று வரலாம் இதனை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் 6.8.2022 ஆம் தெரியாத இன்று தொடங்கி வைக்கிறார்.
பிங்க் நிற பேருந்துகளில் இலவசமாக பெண்கள் இனி பயணிக்கலாம் என்றும் ஆண்கள் எப்போதும் போல் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.