பல மதங்களின் சங்கமம் சிங்காரச் சென்னை பார்போம்.. வாங்க பளிங்கு போன்ற கோயில்களை!
மருதீஸ்வரர் கோயில்:
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள திருக்கோயில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும். இக்கோயிலுக்கு ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர் வந்துள்ளதாக நம்பப்படுகிறது பழங்களால் சிற்ப வடிவம், கோயில் கலை நிர்மாணம் ஆகியவை வரலாற்ற சிறப்புமிக்க எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
அமைவிடம்: திருவான்மியூர்.
நேரம்: காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை.
மாலை 4 மணி முதல் 9 மணி வரை.
காளிகாம்பாள் கோயில்:
திருக்கோயில் சுற்றுலா செல்லும் பொழுது பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று, காளிகாம்பாள் கோயில். பராசக்தியின் மறுவடிவம் காளி, தீமையை அழிக்க பராசக்தி எடுத்த அவதாரம் காளியாகும். பார்ப்பதற்கு கோபக் கனல் தெறிக்கும் இப்பெண் தெய்வம், தீமைகளை அழிப்பதன் மூலம் உலக நன்மைக்கு உறுதுணையாக இருக்கிறாள். மக்கள் மிகவும் பயபக்தியுடன் வணங்கும் தெய்வம் இக்காளிகாம்பாள் ஆவாள்.
அமைவிடம்: 212, தம்பிச்செட்டி தெரு, சென்னை 600001.
திருவள்ளுவர் கோயில்:
சென்னை மயிலாப்பூரில் உள்ள இக்கோயில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் நினைவாக கட்டப்பட்ட ஒரு நினைவு இல்லம் ஆகும். ஆனால் திருவள்ளுவரை தெய்வமாகக் கருதி, இங்கு வரும் மக்கள் தனிப்பட்ட முறையில் பூஜை செய்து, உள்ளத்தை கோவிலாக மாற்றிய காரணத்தினால் இது திருவள்ளுவர் கோயில் என்று பெயர் பெற்றுள்ளது
அமைவிடம்: திருவள்ளுவர் கோயில் தெரு, மைலாப்பூர்.
சீக்கிய குருத்துவார்:
சீக்கிய மதத்தினர் மிக முக்கிய குருவான குரு கோவிந்த சிங் அவர்களின் நினைவாக சென்னை தியாகராய நகரில் சீக்கிய குருத்துவார் கோயில். இயற்கையில் இறைவனைக் காணும் படி இவருடைய போதனைகள் அமைந்துள்ளது. இயற்கையின் சக்தி இவ்வுலகின் மிகப்பெரியது இன்றும், இயற்கை சக்தியின் வடிவங்கள் கடவுள் என்றும் போதனை செய்தவர் குரு கோவிந்த் சிங். சீக்கியர்களின் புனித ஆலயமான பொற்கோயில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் என்னும் நகரில் அமைந்துள்ளது. என்னும் பெயரில் கோயிலாக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
அமைவிடம்: தி நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ளது.
புத்த விகார்:பௌத்த துறவியான கௌதம புத்தரால் உருவாக்கப்பட்டது புத்தமதம். இவருடைய இயற்பெயர் சித்தார்த்தா இவர் உருவாக்கியது இந்த பௌத்த மதம். அரச வம்சத்தில் பிறந்த இவர் 12 வயதில் வீட்டைத் துறந்து துறவியானார். இவள் தன் இன்னுயிரை 82 வயதில் நீத்தார். இவரால் பாதிக்கப்பட்ட தர்மங்கள் திரிபிடகம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பிரிவான தம்மபதம் இன்று பரவலாக காணப்படுகிறது. பௌத்தர்களின் இவ்விகார சென்னை, கென்னட் லேனில் அமைந்துள்ளது.
குருமந்திர் ஜெயின்:
சென்னை தீ நகரில் அமைந்துள்ள குருமந்தூர் ஜெயின் ஜைன மதத்தினரின் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. தீர்த்தங்கரர்களில் 24வது தீர்த்தங்கரர் ஆக விளங்கியவர் வர்த்தமான மகாவீர். இவரது வழியினர் ஆன ஜெயின் மதத்தின் இக்கோயில் சென்னை, திநகர், ஜி என் செட்டி சாலையில், அமைந்துள்ளது.
ஜெயின் மந்திர்:
சில வருடங்களுக்கு முன் சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ஜெயின் மந்திர் வட இந்தியர்களுக்கும் தென் இந்தியர்களுக்கும் வழிபாட்டுத் தலமாக உள்ளது.
அமைவிடம்: மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அமைந்துள்ளது.
பெரிய பள்ளிவாசல்:
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பள்ளிவாசல் 225 ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடக நவாப் வாலாஜா முகமது அலி அவர்களால் கட்டப்பட்டதாகும். இப்பள்ளிவாசல் செம்பினால் கட்டப்பட்டுள்ளது. இதன் மேல் மட்டத்தில் மகாராஷ்டிரா எங்க உருது கவிஞரின் கவிதைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதனை மத ஒற்றுமை பாட்டுக்குரிய சின்னம் என்பார்கள். பள்ளிவாசலில் 2,000 பேரும், வெளி வளாகத்தில் 5000 பேரும் தொழுகை செய்யும் வசதி அமைந்துள்ளது. இதன் அலுவலகம் திருவல்லிக்கேணி காலில் செயல்பட்டு வருகிறது.
அமைவிடம்: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை 600005.
ஆயிரம் விளக்கு பள்ளிவாசல்:
சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல் நவாப் உம்தார் – உல் உமர் என்பவரால் 1800 இல் கட்டப்பட்டது. ஆற்காடு அரசு குடும்பத்தினரால் மொஹரம் நாளை நினைவு கொள்ளும் வகையில் கட்டப்பட்ட அழகிய இஸ்லாமிய கலை நுட்பம் கொண்ட ஆயிரம் விளக்கு பள்ளிவாசல்.
இப்பள்ளிவாசலின் பல்வேறு டூம் எனப்படும் கூம்புகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கிரீம் வண்ணத்தில் உள்ளன. மேலும் கொம்புகளில் மற்றும் மதில் சுவர்களில் புனித குர் ஆன் கட்டளைப்படி வண்ணம் செய்யப்பட்டுள்ளது. இது அண்ணா சாலையும், பீட்டர்ஸ் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் அமைந்துள்ளது. இப்பள்ளிவாசலில் ஆயிரம் எண்ணை விளக்குகள் ஏற்றப்பட்ட காரணத்தினால் இது ஆயிரம் விளக்கு பள்ளிவாசல் என்று அழைக்கப்பட்டு, அந்த பகுதியும் ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிறது.
அமைவிடம்: ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை , சென்னை 600006.