பார்த்தாலே நாவூறும் ஊறுகாய்கள் – 2..!!
ஊறுகாய்கள் பல விதம் இருக்கு. அதில் வெஜிடபிள் ஊறுகாய், மாங்காய் இஞ்சி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய் வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெஜிடபிள் ஊறுகாய்
தேவையான பொருட்கள் : கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய், கீரைத்தண்டு, கேரட் தலா 100 கிராம். எண்ணெய் தேவைக்கு ஏற்ப. கடுகு ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு, பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப.
செய்முறை : கத்திரிக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், கீரைத் தண்டு, காரட் ஆகியவற்றை போட்டு கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய வைத்து, கடுகு, மிளகாய் வறுத்து பொடி செய்து, பெருங்காய பொடி, பச்சை மிளகாய் பொடியாக அரிந்து போட்டு, மஞ்சள் பொடியை சேர்த்து தாளிக்க வேண்டும். கடைசியில் காய்கறிகளை போட்டு ஒரு கிண்டு கிண்டி இறக்கவும். ஜாடியில் ஆற விட்டு மாற்றுவோம். எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும்.
மாங்காய் இஞ்சி ஊறுகாய்
தேவையான பொருட்கள் : மாங்காய் இஞ்சி 200 கிராம், பச்சை மிளகாய் 2, மிளகு 2 ஸ்பூன்.
செய்முறை : மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி வட்டமாக மெல்லியதாக அரிந்து வைத்துக் கொள்ளவும். அதை ஒரு ஜாடியில் போட்டு உப்பு, மஞ்சள் , பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். இவற்றுடன் சிறிது மிளகு போடலாம். கடைசியில் காடி ஊற்றி குலுக்கி வைக்கவும். அடிக்கடி வைப்பதற்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறும் ஊற்றலாம்.
மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள் : நடுத்தர அளவு மாங்காய் இரண்டு, வெந்தயம் அரை ஸ்பூன், மஞ்சள் அரை ஸ்பூன், எண்ணெய் 50 மில்லி, பெருங்காயத் தூள் சிறிதளவு, மிளகாய்த் தூள் தேவைக்கு ஏற்ப. உப்பு தேவையான அளவு.
செய்முறை : மாங்காயை நீரில் சுத்தப்படுத்திக் கொண்டு துண்டுகளாகவோ துருவி வைத்துக் கொள்ளலாம். வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதே போல் மிளகாயை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகை, வெடிக்க விட்டு அத்துடன் பொருட்களை எல்லாம் போட்டு, உப்பு சேர்த்து கிளறவும். பிறகு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இவைகளை காடி வைத்து எடுத்து வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.