ஊறுகாய் அதிகமாக சாப்பிடுபவர்கள் கவனத்திற்க்கு..!!
நம் வீடுகளில் ஊறுகாய் விதவிதமாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஊறுகாய் சாப்பிட வேண்டும். குபேரனுக்கு பிடித்தது ஊறுகாய் என்று கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அதே ஊறுகாயை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கக் கூடும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா.
ஊறுகாய் அதிகமாக சாப்பிடுபவர்கள் முதல் பக்கவிளைவாக வயிற்றுப் புண் ஏற்படும். எப்போதும் தொடர்ந்து ஊறுகாய் சாப்பிட்டால் மேலும் தீவிரமான பாதிப்புகள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
அதிகமான அளவு ஊறுகாயை சேர்த்துக் கொள்ளும் போது கோபம், மன அழுத்தம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஊறுகாய் அதிகம் உண்பதால் சிறுநீரகத்தின் வேலைப் பளு அதிகரிக்கும். சிறுநீரகத்தின் செயல் திறனில் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
பெருமளவில் கடைகளில் தயாரிக்கப்படும் ஊறுகாயின் சுவைக்காகவும் பதபடுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
உணவோடு ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கவும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இந்த பிரச்சனை எதிர்கொண்டிருக்கும். ஊறுகாயில் இருக்கும் உப்பின் அளவு அதிகம் என்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
ஊறுகாய் அதிகம் உண்பவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஊறுகாய், நொறுக்குத் தீனிகளும் இந்த பிரச்சனையை கொண்டுள்ளது.
ஊறுகாயை அடிக்கடி உண்பதற்கு பதிலாக எப்போதாவது தொட்டுக் கொள்ள மட்டும் செய்தால் மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்த்து விட முடியும்.
மேலும் ஊறுகாயை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே தரமாக தயாரித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஊறுகாயை உண்ண வேண்டாம் என்று சொல்லவில்லை. அளவுக்கு அதிகமாக சேர்க்கக் கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.