சினிமாசினிமா பாடல்கள்

இளமை திரும்புதே … பேட்ட படம் பாடல் வரிகள்

பேட்ட (Petta) என்பது ரஜினிகாந்தின் 165 ஆவது திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் விஜய் சேதுபதிபாபி சிம்ஹாசிம்ரன்திரிஷாசசிக்குமார், நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இளமை திரும்புதே புரியாத புதிராச்சே..
இதய துடிப்பிலே பணிக்காத்தும் சூடாச்சே..

ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்..
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்..

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே..
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே..

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே..
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே..

இளமை திரும்புதே புரியாத புதிராச்சே..
இதய துடிப்பிலே பணிக்காத்தும் சூடாச்சே..

வாழ்க்கையே வாழத்தானே வா என் கண்ணே..
வாழ்ந்துதான் பார்ப்போமா வானவில் கோர்ப்போமா..

சாய்கையில் தாங்க தேவை ஒரு தோள் தானே..
தனிமரம் நானடி தோட்டமாய் நீயடி..

வாலிபத்தின் எல்லையில் வாசல் வந்த முல்லையே..
போகும் வரை போகலாம் என்ன பிழையே..

ஊரே நம்மை பார்ப்பது போலெ
ஏதோ பிம்பம் தோன்றுது வானில்..
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல தொடுதே காதலே..

ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்..
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்..

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே..
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே..

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே..
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே..

இளமை திரும்புதே புரியாத புதிராச்சே..
இதய துடிப்பிலே பணிக்காத்தும் சூடாச்சே…

மேலும் படிக்க : நயன்தாரா விக்கியின் பிறந்தநாளுக்கு இவ்வளவா செலவிட்டார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *