மாதவிடாய் காலத்தில் குளியல் குறிப்பு
குளித்தல் என்பது உடலை குளிர்வித்தல் என்பது ஆகும். நம்மில் பலருக்கு குளித்தல் குறித்து தெளிவான புரிதல் இருப்பதில்லை. அதுவும் மாதவிடாய் காலத்தில் குளித்தல் என்பதன் தெளிவாக தெரிதல் அவசியமாகும். ஆண்களும் பெண்களும் உச்சந்தலையில் எண்ணெய் வைத்து குளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வழக்கமான சூழலை விட அதிகமான உடல் சூடு இருக்கும். இந்த காலகட்டத்தில் பெண்கள் குளிக்க வேண்டியது அவசியமில்லை. என்னடா இது புது கதையாக இருக்கின்றது என்று நினைக்க வேண்டாம். அதுதான் உண்மை மாதவிடாய் காலத்தில் பெண்கள் மூன்றாம் நாள் ஐந்தாம் நாள் குளித்தால் போதுமானது, மூன்றாம்நாள், ஐந்தாம் நாட்களில் தலை உச்சியில் எண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும். அப்போது உடலில் இருக்கும் உஷ்ணம் அகலும், மேலும் மாதவிடாய் காலத்தில் பச்சைத் தண்ணீரில் குளிப்பது தவிர்த்துவிட்டு வெதுவெதுப்பான சுடுநீரில் குளித்து வருதல் சிறப்பானதாகும்.
உடல் உஷ்ணத்தை சீராக்கி மாதவிடாய் சீராக இருக்க இது உதவிகரமாக இருக்கும். மேலும் மாதவிடாய் காலத்தில் குளிக்காமல் இருப்பது சிரமம் என நினைத்தாள் பெண்கள் சுடுநீரில் டவல் வைத்து புளிந்து உடலை துடைத்து தூய்மை செய்து கொள்ளலாம். குளிப்பதனால் உடலுக்கு உஷ்ணம் தொடர்பான சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு இதனை பெண்கள் முழுமையாக தெரிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த நாளில் முழு ஓய்வு என்பது அவசியம் ஆகும். ஆனால் எங்களால் ஓய்வெடுக்க முடியாது என நினைக்கும் பெண்கள் குறைந்தபட்சம் மாலையில் சீக்கிரமாகவே உறங்கி இதன் மூலம் உடலில் இருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறி உடலுக்கு ஆரோக்கியம் புத்துணர்ச்சி பெறலாம். இந்த நாட்களில் ஆரோக்கியமான உணவு என்பது அவசியமானதாகும்.
ஓய்வு :
நல்ல ஓய்வும் தேவையான ஒன்றாகும் ஓய்வான மனநிலையில் மிதமான இசை கேட்டு நன்கு உறங்கி வர வேண்டும். மாதவிடாய் காலங்களில் அலைந்து திரியும் வேலையைக் குறைத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும். உடலுக்கு கால்சியம் சத்து கொடுக்கும் கீரை, சுத்தமான மாட்டுப்பால் போன்ற உணவுகள் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்து வருதல் என்பது அவசியமானதாகும்.
நாப்கின்கள் பயன்பாட்டில் பல்வேறு கெமிக்கல்கள் இருப்பது தெரியவருகின்றது. ஆதலால் மீண்டும்பயன்படுத்தும், ரியூசபல் காட்டன் துணியால் செய்த நாப்கின்கள் பெண்கள் வாங்கி பயன்படுத்துதல் நல்லது தரும். அல்லது குறைந்தபட்சம் காட்டன் பஞ்சு வைத்து நாப்கின்கள் பயன்படுத்துங்கள் ஜெல் லாக் அதிக நேரம் பயனுள்ளதாக இருக்கும். நாப்கின்கள் தவிர்ப்பது நல்லது அது பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை உண்டு செய்யும்.
நாற்பதுகளில் மிகுந்த கடின சூழலை இது உருவாக்கும். விழிப்புணர்வுடன் இருங்கள் பெண்களே ஆரோக்கியமான வாழ்வு அவசியமானது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.