செய்திகள்தமிழகம்

லாக்டவுனால் காலியாகின்றது சென்னை, வாழ வழியின்றி வெளியேறும் மக்கள்

காலியாகிறது சென்னை கூட்டமாக பயணிக்கின்றனர் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை தொலைத்து சென்னயில் பிழைப்பை நடத்த வழியில்லாமல் எங்காவது சென்று பிழைக்கலாம் என்று கிளம்பி விட்டனர். யார் செய்த பாவமோ யார் விட்ட சாபமோ சென்னை முழுமையாகக் ஆடிபோய் கிடக்கின்றது. சுமார் 1600 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது பட்டினம் சென்னை பட்டினம் இன்று செழிப்பு இல்லாத பட்டினமாக மாறிக்கொண்டிருக்கின்றன.

மக்களை காலி செய்து கொண்டிருக்கின்றது சென்னை, 16 நூற்றாண்டுகள் வரை நவீன பட்டினமாக வாழ்ந்து கொண்டிருந்த சென்னை வரலாறு கொண்டது. சென்னை இன்று வழக்கொழிந்து காணப்படுகின்றது. என்ன செய்வது என்ற கேள்வியும் எழுகின்றது, கொரோனா-19 சென்னை முழுமையாக காலியாகிக் கொண்டிருக்கின்றன. இங்கு வந்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எழுந்தவர்கள் எல்லாம் இந்த பிழைப்பே வேண்டாம் என்று சென்று கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் சென்னை மீளவேண்டும், அது மீண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் சென்னையை விட்டு விலகாத மக்களும் உண்டு. ஆனால் நாளை முதல் சென்னை இழுத்து மூடப்படுவதாக தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து மீண்டும் வாழமுடியாது என்ற மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். செங்கல்பட்டு வழியாகும் கூட்டம் கூட்டமாக வாகனங்கள் வாகனங்களாக சென்னையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

வேதனை தோய்ந்த முகத்துடன் வெறுப்பு கொண்ட மனதுடன் வேண்டா விருப்புடன் வாழ்க்கை தந்த சென்னையில் ஆரோக்யமாக வாழ முடியாததால் என்று வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். 16 நூற்றாண்டுகள் நம்மை கட்டிக்காத்த சென்னை இன்று போய்வா மகனே என்று அனுப்பி வைக்கின்றது.

யார் விட்ட சாபமோ தெரியவில்லை கோடிக்கணக்கான உயிர்களையும் தன் , மடியில் சுமந்த தாய் அவள் இன்று தன் பிள்ளைகளை வெளியில் அனுப்பி வேலை பாருங்கள் என்கிறாள். சுனாமியின்போது சுக்குநூறாக சென்னை, வெள்ளம் வந்தபோது வெந்து போகாத சென்னை, சென்னை கொரோனா கொடிய நோய் வந்து தன் மக்கள் இறப்பை பார்க்க முடியாமல், இந்த நேரத்தில் யாரையும் கொன்று போடும் விருப்பமின்றி மக்களை செல்லும்படி அனுப்புகின்றது.

வேத்னை தோய்ந்த முகத்துடன் மக்கள் சென்னையை விட்டு வெளியேறுகின்றனர். இது கொடுமையிலும் கொடுமை வலியிலும் வலி, ஆனால் யாரும் வறுமையில் வாழ வேண்டாம். என்று வந்தவழியே செல்கின்றனர் வாடிய முகத்தோடு சென்னைக்கு விடை கொடுக்கின்றனர். மீண்டும் சென்னையிலும் அது தன்னை புதுப்பிக்கும் அடுத்த 16 நூற்றாண்டுகள் தன்னை யாரும் நெருங்காதப்படி பலமாகும் சென்னை மீண்டுமொரு எழுச்சி பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *