பெண்குயின் கதாநாயகி செய்யும் புரட்சி
நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா வேடத்தில் கலக்கிய கீர்த்தி சுரேஷ் தற்போது பெண்குயின் படத்தை நடித்து ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பல படங்களில் கதாநாயகனுக்கு துணையான கதாநாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும் படம் பெண்குயின்.
பெண்குயின் படம் தமிழ் தெலுங்கு மலையாளம் என 3 மொழிகளில் வெளியாகிறது. பெண்குயின் படத்தின் டீசர் திரையுலகின் முன்னணி நடிகையர் பட்டாளத்துடனும்; ட்ரெய்லர் திரையுலகின் முன்னணி நடிகர் பட்டாளத்துடனும் அமேசான் ப்ரைம்மில் பட்டையை கிளப்பி உள்ளது. டீசர் ட்ரெய்லர் வெளியான நிலையில் மர்ம த்ரில்லராக அமைந்திருக்கிறது.
இரண்டு வாரங்களிலேயே பெண்குயின் படத்தின் டீசர் ட்ரெய்லர் படம் என அனைத்தும் வெளியாகிறது. 8 ஜூன் 2020 டீசர் வெளியானது 12 ஜூன் 2020 ட்ரெய்லர் வெளியானது 19 ஜூன் 2020 படம் வெளியாக உள்ளது.
பெண்குயில் படம் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இவருக்கு இதுவே முதல் படம். பெண்குயின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் படப்பிடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் அம்மா வேடத்தில் நடிக்க அவருக்கு சிறு வயது மகன் ஒருவர் இருப்பதாகவும் அவரை தொலைத்துவிட்டு தேடுவதே கதைக் கருவாக அமைகிறது என்பது டிரெய்லரில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
பொன்மகள் வந்தாள் படம் போன மாதம் வெளியான நிலையில் அதே அமேசான் பிரைம் தளத்தில் இப்படமும் வெளியாகுவதால் பார்ப்பவர்களுக்கு இரு கதையும் ஏறக்குறைய ஒரே கருவை கொண்டு உள்ளது போல் இருக்கிறது.
நான்காம் கட்ட ஊரடங்கிற்கு பின்பு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்கியதும் இப்படத்தின் வெளியீடு பற்றிய செய்தி வந்து பரபரப்பாக வெளியிடவும் போகிறார்கள் படத்தின் குழுவினர்.
கொரோனாவால் ஊரடங்கு இட்டு வீட்டில் முடக்கப்பட்ட நிலையில் அனைத்தும் ஸ்தம்பித்து இருக்கிறது. அனைவரும் வேலையில்லாத் திண்டாட்டம் பணம் பற்றாக்குறையால் என அனைத்தும் நிலவிவரும் நிலையில் நம் நடிகையர் திலகமாக நடித்த கீர்த்தி சுரேஷ் புரட்சிகரமாக சம்பளத்தை சற்று சலுகையில் பெற்றுக் கொள்கிறார்.
திரை உலகம் சார்ந்த பலரும் நஷ்டம் அடைந்து வரும் நிலையில் தன்னால் முடிந்த உதவியை கீர்த்தி சுரேஷ் மேற்கொள்கிறார். ‘என் சம்பளத்தை நான் 20% – 30% சதவீதம் வரை குறைத்து கொள்ளகிறேன்’ என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பெண்குயின் கதாநாயகி.
யாருக்குப்பா இந்த மனசு வரும்! ஒரு சல்யூட்டை போடுவோம்.