பையா படம் பாடல் வரிகள் ஏதோ ஒன்று…
கார்த்தி நடித்து 2010 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் என். லிங்குசாமி எழுதி, தயாரித்து இயக்கியுள்ளார். இதில் கார்த்தி மற்றும் தமன்னா நடித்துள்ளனர், மிலிந்த் சோமன், சோனியா தீப்தி மற்றும் ஜெகன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் பேனரில் என். சுபாஷ் சந்திர போஸ் தயாரித்து தயாநிதி அழகிரிஸ் விநியோகம் செய்தார். கிளவுட் நைன் மூவீஸ், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
மேலும் படிக்க : வாவ்! ராதே ஷ்யாம் நாயகி பூஜா ஹெக்டே
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ…
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஓ..
மேலும் படிக்க : வெறுப்பிலும் உறுதியாக நின்ற ஆரியின் வெற்றி!