செய்திகள்வணிகம்

பேடிஎம் தனி அப்ஸ் ஸ்டோர் வெளியிட முடிவு

கூகுள் மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்கு இடையே அண்மைகாலமாக பகை ஏற்பட்டுள்ளன. கேம்லிங் நடத்தியதாகவும், தங்கள் விதியை மீறியதாக இந்திய நிறுவனமான பேடிஎம் ஐ அண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் பிளே ஸ்டோரிலிருந்து தற்காலிகமாக நீக்கின. மீண்டும் விதிமுறைகளுக்கு உட்பட்டு பேடிஎம் பிளே ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • அமெரிக்க நிறுவனமான கூகுள் 30 சதவீதம் கட்டணம் செலுத்த சொல்லி வசூல் வேட்டை நடத்துவதாக பேடிஎம் குறை கூறியது.
  • அதிருப்தி அடைந்த பேடிஎம் கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக அப்ஸ் ஸ்டோர் தயாரிக்க முடிவு.
  • பேடியம் தயாரிக்கும் அப்ஸ் ஸ்டோருக்கு ‘பேடிஎம் மினி அப் ஸ்டோர்’ எனப் பெயரிட்டுள்ளன.

பேடிஎம் தங்கள் அப் ஸ்டோர் தயாரிக்க ஜப்பான் நிறுவனமான சாஃப்பேங் மற்றும் பிரபல அமெரிக்க நிறுவனமான பெர்க்க்ஷெ ஹாதவே போன்ற நிறுவனங்களிடம் இருந்து பேடிஎம் கோடிக்கணக்கான நிதியை பெற்றுள்ளது. தாங்களே ஒரு அப்ஸ் ஸ்டோரை தயார் செய்வதாகவும், 2021 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் செயலிகளை இடம் பெற செய்யப் போவதாகவும் பேடிஎம் தெரிவித்துள்ளன.

செயலிகளுக்கு

வளரும் இந்திய டெவலப்பர்களின் செயலிகளுக்கு தாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க போவதில்லை என்றும் அறிவித்தது. கிழக்கு-மேற்கு கம்பெனியோ, எந்த கம்பெனியாக இருந்தாலும் இந்தியாவை ஒரு இந்திய கம்பெனி தான் ஆள வேண்டும் என்று பேடிஎம் கூறியுள்ளன.

பல டெவலப்பர்கள் தங்களின் செயலியை பயன்பாட்டாளர்களுக்கு கொண்டு சேர்க்க முடிவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி ராக்கெட்டை விட வேகமாக சென்று கொண்டிருக்கிறது. கேம்ஸ், அப்ஸ், தொழில்நுட்பம் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை தொடங்கி வெற்றிகண்ட கம்பெனிகள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

பேடிஎம் தனியாக

ஆன்லைன் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் தனியாக அப்ஸ் ஸ்டோர் ஒன்றை திறப்பதாக அறிவித்தது. எத்தனையோ காலமாக பலதுறைகளில் பணம் சேர்த்த முதலாளிகள் கூட சட்டென்று மேல்வரும் தொழில்நுட்ப முதலாளிகளுக்கு ஈடு கொடுக்க முடியாது. உலக பணக்காரர்கள் பட்டியலில் அதிக இடங்களை தொழில்நுட்ப முதலாளிகளே பிடித்து விடுகிறார்கள்.

முதலாளிகளும் தங்கள் தொழிலையும் தொழில் நுட்பத்திற்கு மாற்றி வருகிறார்கள். ஒரு நிறுவனத்தை முந்துவதற்கு மற்றொரு நிறுவனம் புதிய யுத்திகளை கையில் எடுத்துக் கொள்கின்றன. தொழில் மாற்றத்தின் போது முதலாளிகளுக்கு இடையில் ஏற்படும் போட்டிகள் வியாபார பகையாக மாறிவிடும் சில நேரங்களில் என்பது நாம் அறிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *