கொரோனாவுக்கு ஆயுர்வேதம் மருந்தை கொடுத்துள்ளது பதஞ்சலி
சித்த மருத்துவர் தணிகாச்சலம் கொடுத்த கபசுரக் குடிநீர் பலர் பயன்படுத்தி வந்திருக்கும் நிலையில் தற்போது அடுத்த நாட்டு வைத்தியமான ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் எம்.டி ஆச்சார்யா பால்கிருஷ்ணா கொரோனா நோயாளிகளை ஆயுர்வேத மருந்தை கொண்டு 3-14 நாட்களுக்குள் குணப்படுத்தலாம் என கூறினார்.
பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் செவ்வாய்க்கிழமை 23 ஜூன் 2020 ‘கொரோனில் மற்றும் ஸ்வாசரி’ மருந்துகளை அறிமுகப்படுத்தியது. இந்த ஆயுர்வேத மருந்து கொரோனா நோயாளிகளை 100% குணப்படுத்தும் என தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.
ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக்பீத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் சோதிக்கப்பட்டு 100% குணமடைந்த பின்னரே இதனை வெளியிட்டதாக கூறுகின்றனர். உயிரிழப்பு 0%, குணப்படுத்துவது 100% என்பதை அவர்கள் நடத்திய பரிசோதனையால் குறிப்பிட்டுள்ளனர். 6 நாட்களில் 69% பாதிக்கப்பட்ட நோயாளிகளை இந்த மருந்தை கொண்டு குணமடைய வைத்துள்ளனர்.
கொரோனாவில் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள இறுதிக்கட்ட நோயாளிகளை குணப்படுத்தும் முயற்சியில் ஆராய்ச்சியை வழி நடத்திக் கொண்டு வருகிறது இந்த நிறுவனம்.
கோவிட்-19 கிட்
திவ்யா கொரோனில் டேப்லெட் என்று அழைக்கப்படும் பதஞ்சலியின் COVID எதிர்ப்பு டேப்லெடில் கிலோய், துளசி மற்றும் அஸ்வகந்தா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த டேப்லட்டை காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு நாளைக்கு மூன்று முறை சூடான நீரில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
கொரோனா கிட் ரூ .555 க்கு கிடைக்கும் என்று ஆச்சார்யா பால்கிருஷ்ணா கூறினார், கிட் 30 நாட்களுக்கு உள்ளது. இந்த மருந்து கிட் இப்போது எங்கும் கிடைக்கவில்லை, ஒரு வாரத்தில் பதஞ்சலி கடைகளில் கிடைக்கும் என்று பாபா ராம்தேவ் கூறினார்.
இந்தக் கொரோனா கிட் அளவு 15 முதல் 80 வயது உள்ள பெரியவர்களுக்கு பயன்படுத்தலாம் மற்றும் இதனின் பாதி அளவு சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை முறை டிப்ஸ்
இந்தக் கடுமையான சூழல்ல நம்ம உடலை நம்ம பாதுகாப்பது முக்கியமான ஒன்று. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் பல டிப்ஸ் கொடுக்கிறார்கள்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று பதஞ்சலி கேட்டுக்கொண்டார். நுரையீரல் மண்டலத்தை மேம்படுத்துவதைத் தவிர இந்த ஆயுர்வேத மருந்துகள் மனித உடலியலை வலுப்படுத்துவதாகக் கூறுகின்றன.
ஸ்வாசரி குவாத், அஸ்வஷிலா காப்ஸ்யூல், சியவன்பிரஷ், தேன், கற்றாழை சாறு, கிலோய் ஜூஸ், ஷிலாஜித் கேப்சூல், 1-1 துளி ஷிலாஜித் சத் மற்றும் மஞ்சள் (அ) பதனாஜ்லி தூய கேசர் பாலுடன் போன்றவற்றை தினசரி உட்கொள்ளுமாறு பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் அறிவுறுத்துகிறது.
‘எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ணமாட்டோமா’
அப்படின்னு நம்ம தளபதி சொல்றமாதிரி கொரோனா ஒரு வழி பார்த்துருவோம் வாங்க.