உணர்ச்சி சார்ந்த பிரச்சனையை போக்க சந்திர தரிசனம்
மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் 22.6.20 திங்கள் கிழமை. பிறை தரிசனம் ஏன் உருவானது.
பிறை தரிசனம் ஏன் உருவானது
விநாயகப்பெருமான் தன் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட பிறகு விநாயகர் உலகங்களை பார்வையிட சென்றார். அப்படி சென்ற போது விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுமதி என்பதால் விநாயகரின் உருவத்தை பார்த்து பரிகசித்தான். இதனால் கோபமுற்ற விநாயகர் உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார்.
விநாயகரின் சந்திரனின் அழகு குன்றியது. இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழு வெண்மதியே பெற்றான். முழுமதி நாளில் சந்திரன் வழிபடுவது சந்திர தரிசனம் ஆகும். ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் செய்வதால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறுவார்கள்.
பணவரவு உண்டாக
மூன்றாம் நாள் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவடையும். மூன்றாம் நாள் வரும் சந்திரனை மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும். என்பது ஒரு நம்பிக்கை. சந்திரனை தரிசிக்கும் வேளையில் கையில் காசை வைத்து மூடிக் கொண்டு வலமாக மூன்று முறை சுற்றியும், மீண்டும் ஒருமுறை பிறையை தரிசித்து வணங்க பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படும். பசுமையான மரம் அல்லது தங்கம் பார்க்க பணவரவு உண்டாகும்.
மூன்றாம் பிறையை பார்ப்பதால் மன அமைதியும் கிடைக்கும். இந்த மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்று சொல்லலாம். சிவன் தன் முடி மீது அணிந்து உள்ளதே இந்த பிறை ஆகும். பிறை இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியிலிருந்து தோன்ற ஆரம்பிக்கும். ஒரு அரைமணி நேரத்திற்குள் இந்த பிறை தோன்றி மறைந்து விடும். அதன்பிறகு தெரியாது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இந்த பிறையை தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் வருகின்ற இந்த வளர் பிறை நிலவை அனைவரும் தரிசிக்க வேண்டும்.
அனைத்து தோஷங்களும் நீங்கும்
இந்த பிறையை தரிசனம் செய்வதால் முற்பிறவி பாவம் போக்கும் என்பார்கள் நம் முன்னோர்கள். சந்திரன் மனநிலைக்கு உரியவர். கோபம் கொள்ளுதல். இல்லறத்தில் சண்டை ஏற்படுதல் போன்ற உணர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுபோன்ற நேரத்தில் சந்திர தரிசனம் செய்துவர சந்திராஷ்டமம் மற்றும் சந்திரனின் மறைவு தன்மையால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
சோமவாரம் சேர்ந்து இன்று சந்திர பிறை
வாழ்வில் செல்வச்செழிப்பு சேரும். ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் இந்த பிறையை தரிசனம் செய்ய முடியுமா என்றால் அனைவராலும் முடியாது. சந்திரனை ராஜகிரகம் என்று கூறுவார்கள். மகாலட்சுமியை சந்திர சகோதரி என்று கூறலாம். சந்திர தரிசனம் செய்பவர்கள் சந்திர சகோதரியான மகாலட்சுமியின் அருள் கிட்டி அனைத்து செல்வத்தையும் பெறுவார்கள். பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சக்தி கொண்டது.
திங்கள் கிழமை சந்திர பகவானுக்குரிய சோமவாரம் சேர்ந்து இன்று சந்திர பிறை வருவதால் இன்று தரிசனம் செய்தால் மிகவும் விசேஷமாகும், வருடம் முழுவதும் சந்திரனை தரிசித்த பலனும் நமக்கு கிடைக்கும். சில நேரங்களில் மேகம் மறைத்துக் கொள்ளும். சிலருக்கு பார்க்க முடியாது, சிலர் மறந்து விடுவார்கள் இப்படி இருக்க இந்த பிறையை நாம் தரிசனம் செய்தால் மனநிம்மதி, தெளிவான ஞானம், ஆரோக்கியம், தம்பதிகள் ஒற்றுமை கிடைக்கும்.