களைகட்டும் பார்லி குளிர்கால தொடர்
குளிர்கால பார்லிமெண்ட் கூட்டதொடரானது இன்று தொடங்கியது. என்ன போடு போடுமோ எதிர்கட்சி என ஆளும் கட்சி பயப்படுமோ என்ற எண்ணம் எல்லாம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஆளும் கட்சி தரப்பில் அடித்து நொருக்க தயராக இருப்பதாக மோடியின் பேட்டி மூலம் நாம் அறியலாம். என்னதான் எதிர்கட்சிகள் புயல் அடித்தாலும் எதிர் நீச்சல் போட்டு எல்லோரையும் சமாளிக்க ஆளும் அரசு தயராக இருக்கும் என தெரிகின்றது.
டெல்லியில் பரபர அரசியல்
டெல்லியில் பரப்பரப்பான சூழலில் இரு அவைகளும் குளிர்கால கூட்டத்தொடரை எதிர்கொள்கின்றது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் புதிய அம்சமாக முதல் முறையாக துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தங்கர் மாநிலங்களவையை நடத்துகின்றார்.
பிரதமர் உரை
பாஜகாவின் முக்கிய அம்சம் நாட்டின் பிரதமர் மோடி அவர்களுடன் பார்லிமெண்டில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மோடி அவர்களின் உரையில் துணை ஜனாதிபதிக்கு வாழ்த்துகளுடன் உரையானது தொடங்கியது.
குளிர்கால கூட்டத்தொடரின் அம்சங்கள்:
நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று தொடங்கியது. மொத்தம் 17 அமர்வுகள் நடக்கவுள்ளது. வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறும். மத்திய அரசு பார்லிமெண்ட் கூட்டத்தொடருக்கு முன்பு அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பார்லிமெண்ட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூட்டத்தொடரானது நடைபெறுகின்றது.
பார்லியில் எத்தனை மசோதாக்கள்
பார்லியில் மொத்தம் 16 மசோதாக்கள் நடைபெறவுள்ளது. மாநில கூட்டுற்வு சங்கங்களின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மை, கடலோர மீன் வளர்ப்பு மசோதா, வனப்பாதுகாப்பு, பல மருத்துவர் சட்ட மாற்றம், நர்சிங் கவுன்சில் போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளது. மக்களே நாம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயராகி வருகின்றது. இதனை மனதில் வைத்து இந்த கூட்டத்தொடரில் தேர்தலுக்குக்கான அச்சாரங்கள் இருக்கும்.