News update: படிப்பிற்காக இந்தியாவை நாடும் பப்புவா நியுகினியா நாட்டின் மாணவர்கள்; ஆளுநர் பகீர் பேட்டி
பப்புவா நியுகினியா நாட்டில் இருந்து மேல்படிப்புக்காக இந்திய நாட்டை நாடும் அந்நாட்டு மாணவர்கள்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜேகே நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்களுக்கு, இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் உயர்கல்வி துறை சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பப்புவா நியூகினியா நாட்டின், ஆளுநர் சசீந்தரன் முத்துவேல், மற்றும் இந்தியா, மற்றும் பப்புவா நியுகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு, கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் உயர் கல்வி பற்றி எடுத்துரைத்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புறையாற்றினார்,
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பப்புவா நியுகினியா நாட்டின் ஆளுநர் சசீந்தரன் முத்துவேல் கூறும் பொழுது, பப்புவா நியூகினியா நாட்டில் இந்திய மாணவர்கள் கல்வி பயில ஏற்ற நிலை எந்த அளவிற்கு உள்ளது, என்பது குறித்தும் பப்புவா நியுகினியா நாட்டில் படிக்கும் மாணவர்கள், மேல்படிப்புக்காக இந்தியா நாட்டை நாடுவது குறித்தும் எடுத்து கூறியதுடன், அவ்வாறு மேல்படிப்புக்காக இந்தியாவை நாடும் மாணவர்களுக்கு இந்திய அரசு, என்னென்ன கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொள்கின்றது என்பது குறித்தும் கூறினார்,
அந்த நாட்டு கல்வி முறை என்பது அங்கு கல்வியை அரசு தான் நடத்துகின்றது, தனியார் கல்வி நிறுவனங்கள் பெரியதாக இல்லை, இந்திய நாட்டின் பிரதமர் மோடி பப்புவா நியுகினியா நாட்டை சுற்றி பார்த்து அங்குள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செய்து உள்ளார், இதன் சாராம்சமாக பப்புவா நியுகினியா நாட்டின் பிரதமர் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார், என்றார், இதனை தொடர்த்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலவேம்பு சித்தர் ஸ்ரீ பாபு ஜி ஸ்வாமிகள், கல்லூரியின் முதல்வர் முனைவர் நாகராஜன், கல்லூரியின் தாளாளர் கேஎஸ் கீதா, துணை முதல்வர் பாஸ்கரன், மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது