ஆன்மிகம்

பங்குனி உத்திர விரத கடைப்பிடியுங்க நினைத்தெல்லாம் நிறைவேறும்!

பங்குனி  உத்திர நாள்   சிறப்பானதாக மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றது. பங்குகின் உத்திரத்தன்று சிவபெருமான பார்வதி திருமணம், முருகர் தேவையானை திருமணம் மற்றும் ராமர் சீதா கல்யாணம் நடைபெற்ற நாள் இந்நாளில் மக்கள்  தெய்வத் திருத்தலங்களுக்கு சென்று வருவார்கள். 

முருகனின் ஆறுபடை வீடுகள் மற்றும் நமது அருகில் உள்ள பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சிவபெருமானை வழிப்பட்டு முருகனை பங்குனி உத்திர நாளில் வழிப்பட்டு வந்தால் சிறப்பான அருளைப் பெற்று நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். 

பங்குனி உத்திர விரதமானது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை கொடுத்து நாம் விரும்பியது கிடைக்கச் செய்யும்.   சிறப்பு மிக்க இந்நாளில் நாம் அதிகாலை எழுந்து குளித்து  முடித்து காலை 10.30 மணி முதல்  பூஜையை வீட்டில் செய்யலாம். 

காலை மற்றும் மாலை கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் நாம் கலந்து கொண்டு அங்கு நடைபெறும் திருக்கல்யாண பூஜையை  தருசித்து இறைவன் அருள் பெற்று வாருங்கள் வாழ்கையை வளமாக அமையும் இந்நாளினை நாம் இறைவனை தருசித்து  இறைவன் அருள் பெற்று வரலாம். 

இந்நாளில் வீட்டில் பூஜை செய்ய விளக்குகளை சுத்தம் செய்து ஒவ்வொரு விளக்கிற்கும் இரண்டு திரிகள் சேர்த்து விளக்கேற்ற வேண்டும்.  அத்துடன்   வெற்றிலையில் மஞ்சள்  பிள்ளையார் வைத்து  பழங்கள் படைத்து வழிப்படலாம்.

பங்குனி உத்திர நன்நாளில் மார்ச் 20, 2019 முதல் மார்ச் 21, 2019 மாலை வரை விரதம்  இருந்து வர வேண்டும். முடியாதோர்  ஒரு வேலை சாப்பிட்டு நீர் ஆகாரம் எடுத்து வர வேண்டும். வழிப்பாடு நடத்தி சிவன் மற்றும் முருகனை வழிப்பட்டு திருக்கல்யாண கோலம் கண்டு வந்தால் திருமணம்  நடைபெறும் வயதில் இருப்போர்க்கும், திருமணத்தடையுள்ளோர்க்கும் விரைவில் திருமணம் கைக்கூடி நல்வரனாக இறைவன் அருளால் அமையும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *