ஆன்மிகம்ஆலோசனை

Thirumanajeri பதிகம் : பங்குனி உத்திரம் திருமண வைபோகம் கைகூடும் திருமணஞ்சேரி பதிகம்

சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் கல்யாணம் நடந்த நாளையே பங்குனி உத்திரமாக அனைவரும் கொண்டாடி வருகிறோம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகத்தான நாளில் அனைத்து சிவன் ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் விசேஷமாக இருக்கும். சிவன் பார்வதி திருமண வைபவ நாளில் நீண்ட நாள் திருமணம் நடைபெறாதவர்கள், நல்ல வேலை கிடைக்க நினைத்துக் கொண்டு இரப்பவர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள திருமணஞ்சேரி பதிகத்தை உச்சரித்து சிவபெருமானை வணங்கினாலே நீங்கள் நினைத்தது நிறைவேறும். திருமண வைபோகம் உங்கள் வீட்டிலும் கைகூடும்.

1.அயிலாரும் அம்பதனாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழியாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

2.விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல்லார்வினை பாறுமே.

3.எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையும் ஆள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின்றார்வினை வீடுமே.

4.விடையானை மேலுலகேழுமிப் பாரெலாம்
உடையானை ஊழிதோறூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல்லார்க்கில்லை யல்லலே.

5.எறியார்பூங் கொன்றையினோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடையார மிலைத்தானை
மறியாருங் கையுடையானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல்லார்க் கிடர் சேராவே.

6.மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசையான பகர்வானை
வழியானை வானவரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல்லார்க்கெய்தும் இன்பமே.

7.எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின்றார்பெரி யோர்களே.

8.எடுத்தானை யெழில்முடியெட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல்லார்பெரியோர்களே.

9.சொல்லானைத் தோற்றங்கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவரேத்தும் மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெருமான் கழல் ஏத்துமே.

10.சற்றேயுந் தாமறிவில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.

. 11.கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க்கில்லை பாவமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *