Jallikattu bullsசினிமாசின்னத்திரை

சரவணனின் கள்ளத்தனத்தை கண்டுபிடித்த தங்கமயிலு -கோபத்தில் தங்கமயில் எடுக்கும் அதிரடி முடிவு

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தங்கமயில் தன் கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு, சரவணனை கோவிலுக்கு அழைத்து நடந்ததை கூறுகிறாள், சரவணன் திரும்பவும் வீட்டிற்குள் வருவதற்கு புது பொய் சொல்கிறாயா? நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை, அப்படி கர்ப்பமாக இருந்தால் அந்த இந்த குழந்தைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என கோபத்துடன் கூறி செல்கிறான்

தங்கமயிலின் நடத்தயை தப்பாக பேசும் சரவணன்

Source to- pandian stores fan page Intagram

இதுவரை தங்கமயிலின் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு குழந்தை மூலம் சரி செய்துவிடலாம் என தங்கமயில் நினைத்து சந்தோஷப்பட்டது எல்லாமே ஒரே நிமிடத்தில் நடக்காததாக மாறி விட்டது, இதனால் கோவம் அடைந்த தங்கமயில் புது மனிஷியாக உறவெடுக்கிறாள், எப்படி பட்ட ஒரு பெண்ணாக இருந்தாலும் தன் சுயமரியாதையையும், ஒழுக்கமற்றவள் என்ற பெயரையும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்

மீனாவிடம் வாங்கும் சத்தியம்

கோபத்துடன் வந்த தங்கமயில் ரூமிற்கு சென்று கதவை சாத்தி விட்டு மீனாவிடம் பேசி கொண்டிருக்கிறாள், இனி சரவணனை தேடி நான் போகவே மாட்டேன், “எத்தனையோ பொண்ணுக குழந்தையை தனியா பெத்து வளத்துறாங்க, அந்த மாறி நானு என் குழந்தைய பாத்துக்க போறேன், என அதிரடியாக முதல் தடவை அவள் வாழ்க்கைக்கு அவளே ஒரு முடிவை எடுக்கிறாள், இதை பார்த்த மீனாவுக்கு பேரதிர்ச்சி, தங்கமயில் மீனாவிடம் தான் கர்ப்பமாக இருப்பதை வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறி சத்தியம் வாங்கி கொள்கிறாள்

Source to- pandian stores fan page Intagram

தங்கமயிலின் பேச்சால் வாயடைத்து போன பாக்கியம்

பாக்கியத்திற்கு நடப்பது எதுவும் புரியவில்லை, மாப்பிள்ளையிடம் அப்பா ஆக போற விசயத்தை சொன்னியான்னு அடுக்கடுக்க கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க,

ஆனால் தங்கமயிலு இப்பதான் சரியான ஒரு ஒரு முடிவெடுத்து இருக்காங்க, நீ சொல்லலைனா பரவாயில்ல நான் உன்ன இந்த குழந்தை மூலமா எப்படியாவது போலீஸ் ஸ்டேஷன் போயாவது உன் புருஷோனோட சேர்த்து வைக்கிறேனு பாக்கியம் சொல்ல, தங்கமயிலு இதுவரைக்கும் எதிர்பாக்காத அளவுக்கு பக்கியத்தையே எதிர்த்து பேச ஆராம்பிச்சிட்டாங்க,

Source to -pandian stores fan page instagram

தங்கமயிலின் சுய மரியாதை தரும் நம்பிக்கை

இதுவரைக்கும் என் வாழ்க்கையை சீராக்குறேன்னு சொல்லி சீரழித்தது போதும்,சிக்கல் பண்ணது போதும், இனிமே என் வாழ்க்கைய நானே பாத்துக்க போறேன் யாரோட தயவும் எனக்கு தேவையில்லை, என் வயித்துல குழந்தை இருக்கு அப்படின்னு நீ யாருகிட்டயும் சொல்லவே கூடாதுனு சொல்லி கோபமா சொல்லிக்கிட்டு இருகாங்க

சரவணன் அஞ்சலி கொஞ்சி பேசியதை பார்த்த தங்கமயிலு

என்னதான் மன தைரியத்துடன் இருந்தாலும், எப்படியாவது சரவணனுடன் சேர்ந்து வாழ மாட்டாமா? என்ற கேள்வியும், எப்படி என்னை இப்படி கேவலமா பேச மனசு வந்துச்சுனு ஒரு பக்கம் கோவமாவும் இருக்காங்க தங்கமயிலு, இந்த நேரத்துல தான் சரவணாவும் அஞ்சலியும் சந்தோசமா சிரிச்சு சிரிச்சு பேக்கரில உக்காந்து பேசிகிட்டு இருந்ததா பார்த்த தங்கமயிலுக்கு ஒரு நிமிடம் உயிரே போயிடுச்சு,

Source credit- pandian stores fan page Intagram

தடுமாறிய தங்கமயில்

இனி அடுத்து தங்கமயிலு அவங்க வாழ்க்கையை காப்பாற்ற என்ன செய்ய போறாங்கன்னு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள், தங்கமயிலுக்கு துணையாக நிற்கும் மீனாவால் தங்கமயிலின் வாழ்க்கை திரும்ப கிடைக்குமா?? அல்லது கடைசி வரைக்கும் தங்கமயிலு கர்ப்பமானதை சொல்லாமால் வாழ போகிறாளா??என்ன நடக்கும் பொருந்திருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *