சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

PS -2 update : சாமியாராக போகும் சரவணன், மயங்கி விழுந்த கோமதி..

நமது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சாமியாராக செல்ல முடிவெடுத்த சரவணன் அதிர்ச்சியில் குடும்பத்தினர்.

சாமியாராக போகும் சரவணன்

சரவணன் பிறந்த நாளுக்காக கேக் வெட்டுவதற்கு ஒட்டு மொத்த குடும்பமே காத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் சரவணன் அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டார். பக்கா சாமியார் கோலத்தில் காட்சி தரும் சரவணன் நான் இனிமேல் சாமியாராக போகிறேன் என தனது விருப்பத்தை சொல்லிவிட்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆசிர்வாதம் செய்கிறார் என்று அதிர்ச்சியில் கோமதி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார்.

பாளார் என்று அறைந்த பாண்டியன்

இப்படியே சரவணன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்த வேளையில் பார்க்கும் வரை பார்த்துவிட்டு பொறுமை இழந்த பாண்டியன், சரவணனை பலார் என்று ஓங்கி அறைந்து விடுகிறார் நாங்க எல்லாம் இருக்கும்பொழுது நீ சாமியாராக போறியா. ஒழுக்கமா இந்த சாமியார் வேஷத்தை கலைத்து விட்டு நான வாங்கி கொடுக்க புது துணியை போட்டுட்டு வாடா என்று சொன்னதும் பொட்டிப் பாம்பாய் அடங்கிய சரவணன் ஒரே ஓட்டமாக ஓடி துணியை மாற்றி விட்டு வந்து விட்டார். பின்பு குடும்பமே சரவணன் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியது.

இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் சரவணனுக்காக வேண்டி தவிக்கிறது. அதேபோல் சரவணனும் குடும்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் நல்ல குணம் உடையவராக இருக்கிறார். இப்படிப்பட்ட இந்த மனிதனுக்கு எப்பொழுது தான் திருமணம் நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *