மீண்டும் புல்வாமாவில் 20 கிலோ குண்டுகள் வெடிப்பு
மீண்டும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் செய்து காரில் 20 கிலோ வெடிகுண்டுகளுடன் புல்வாமா பகுதியில் இந்தியப் பாதுகாப்பு படை வீரர்களை தாக்க சுற்றியுள்ளனர், அதனை கண்டுபிடித்து வெடிக்கச் செய்துள்ளது இந்திய பாதுகாப்பு படை.
கடந்த 2019 பிப்ரவரி மாதம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் மரணித்தனர். அதேபோல் நேற்று காரின் 20 கிலோ வெடிகுண்டுகளுடன் பயணித்த ஒருவரை சந்தேகப் பார்வையுடன் பரிசோதனை நடத்தியது. இந்த பரிசோதனைக்கு பயந்து காரை நிறுத்தி அப்படியே ஓட்டுனர் ஓடிவிட்டார். அதன்பின் அதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கும்போது 20 கிலோ குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காரை நகர்த்த முயற்சித்தாள் பெருமளவில் வெடித்துவிடும் என்று இந்தியப் பாதுகாப்பு படை சுற்றியிருந்த மக்களை நகர்த்தி யாரும் இல்லாத சூழலில் காரை அங்கேயே வெடிக்கச் செய்தனர்.
அப்போது அப்பகுதியே வெள்ளக்காடாக புகை மண்டலமாக காட்சியளித்தது. பாகிஸ்தானை சேர்ந்தவர்களுடன் இணைந்து தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. எனினும் இது மிகப்பெரிய அளவில் சேதத்தை உண்டு பண்ணக்கூடிய தாக்குதலாக இருந்திருக்கக்கூடும். ஆனால் இந்திய பாதுகாப்பு படை உசாரானது நல்லதாகப் போனது, இல்லையெனில் நாட்டில் இன்னும் பெரிய சேதத்தை உண்டு செய்திருக்கும்.
இந்தியாவில் கொரனா பாதிப்பு சிக்கல் பெருமளவில் பாதிப்பில் இருக்கும் இந்த நிலையில் சீனா ஒருபக்கம் வரிந்து கட்டிக் கொண்டு இந்தியாவை வாங்கடா என்று வம்புக்கு இழுக்குகின்றது. மறுபக்கம் பாகிஸ்தான் தனது கைவரிசையை தீவிரவாதிகளுடன் இணைந்து புல்வாமா பகுதியில் தொடங்கியுள்ளது.
இது இந்தியாவின் அமைதிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும் உலகமே கோவித்-19 பாதிப்பால் பெருமளவில் சிக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் இருக்கும் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இந்தியாதான் தேவையா, இது எந்த விதத்தில் நியாயம் காத்திருக்கும் இது போன்ற இக்கட்டான சூழலை இந்தியா கடந்து வரவேண்டும். அதற்கான திட்டங்களை நிச்சயம் நாம் தீட்டுவோம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தருதல் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க முனைதல் இவை அனைத்தும் மிக அவசியமானதாகும்.
புல்வாமாவில் நடத்தவிருந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு விட்டது இது குறித்து இந்திய பாதுகாப்பு படை மத்திய அரசுடன் விளக்கமளிக்கும். மத்திய அரசும் இது குறித்து அடுத்த நடவடிக்கை எடுக்கும். இந்த நேரம் தேசத்திற்கு மிகவும் சவாலானது ஒரு பக்கம் நோய் மற்றொரு பக்கம் ஏழை நாடுகளில் 2 தாக்குதல் இவற்றை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்ற ஆலோசனையை ஒவ்வொரு இந்திய குடிமகனும் மேற்கொள்ளவேண்டும்.
தேசத்திற்கு சாதகமாக செயல்பட வேண்டிய தருணம் இது நமது பாதுகாப்பு படையை பாராட்ட வேண்டிய தருணம் இது அவர்கள் எல்லையில் இல்லை என்றால் உள்நாட்டில் நாம் சுதந்திரத்துடன் ஒன்றாக முடியாது என்பதை நினைவில் வைப்போம். பாதுகாப்புத் துறைக்கும் தேசத்திற்கும் பக்கபலமாக இருக்க வேண்டியது நமது கடமையாகும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒவ்வொரு இந்தியனும் அவரவர் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பது அவசியமாகின்றது.