பாகிஸ்தான் யாருக்கும் அடிமையாக இருக்காது:- பாக் பிரதமர் பேச்சு..!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பிரதமர் இம்ரான்கான், முக்கிய உரையாற்றினார்.
நாளை இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தானுக்கு வெளியே உள்ள சில சக்திகள், நமது உள்நாட்டு விவகாரங்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றன என இஸ்லாமாபாத் பேரணியில் இம்ரான் கான்தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், பாக்கிஸ்தான் உள்விவகாரங்களில் ‘வெளிநாட்டு தலையீடுகள்’ பற்றி எனது உரையின் முடிவில் கூறப் போகிறேன். நான் பதவி விலக மாட்டேன், எனது பதவிக் காலத்தை நான் நிறைவு செய்வேன், என்றும்,
தனக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் (அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை) செயல்படுகிறது. யாருக்கும் சாதகம் இல்லாத, சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடித்து வருவதால் என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
பாகிஸ்தான் யாருக்கும் அடிமையாக இருக்காது. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பாகிஸ்தான் பின்பற்றும்:
நான் யார் முன்பும் பணிந்ததில்லை, எனது நாட்டையும் பணிய விட மாட்டேன் என்றும் உணர்சி பொங்க தெரிவித்தார்.