திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவில் தீர்ப்பு
திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவில் தீர்ப்பு. மன்னர் குடும்பத்திற்கு ஆதரவு. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி திருவிதாங்கூர்.
மன்னர் குடும்பத்தினர் கோவில் பணிகள், சொத்துக்கள் நிர்வகித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் இருந்து தங்கம், வைரம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவத்தை பற்றி நாடு முழுவதும் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. அப்போது மீதமுள்ள ஆறாவது அறையை திறக்க மன்னர் குடும்பத்தினர் அனுமதி அளிக்கவில்லை.
ஏனென்றால் அந்த கதவை திறந்தால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அந்த அறை மட்டும் திறக்கப்படாமல் அப்படியே இருந்தது.
இதனைத் தொடர்ந்து கோவிலை கேரள அரசு எடுத்து நிர்வகிக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விசாரித்த நீதிமன்றம் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது.
ஏப்ரல் மாதத்துடன் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உரிமை அவர்களுக்கே உரியது என தீர்ப்பு தெரிவித்துள்ளது.
திருவிதாங்கூர் பத்மநாத சுவாமி கோயில் குறித்து பல கதைகள், திருப்பங்கள், உரிமைகள் என இந்த கோவில் கடந்த ஓராண்டு காலமாக பெருமளவில் பேசப்பட்டு வந்தது. தற்போது இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.