பாயாசம் வெரைட்டிஸ்.!
பாயாசம் என்றாலே குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பாயாசம் வேண்டாம் என்று ஒதுக்குபவர்கள் கிடையாது. அப்படியிருக்க விதவிதமான பாயாசத்தை செய்து கொடுக்கும் போது அதன் சுவையும், மணமும் மாறுபடும்.
கோதுமை பாயாசம்
தேவையான பொருட்கள் : கோதுமை கால் கிலோ, வெல்லம் 150 கிராம், ஏலம், முந்திரி தேவைக்கு ஏற்ப.
செய்முறை : கோதுமையை மணம் வரும் வரை வறுக்கவும். பிறகு அதை குக்கரில் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து நன்கு வேக விட வேண்டும். ஒரு டம்ளர் கோதுமைக்கு 3 டம்ளர் தண்ணீர் வைத்து 7 விசில் வரை விடலாம். பிறகு வெந்த கோதுமையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். அத்துடன் சேர்த்து ஏலக்காய் தட்டி போட்டு இறக்குங்கள். சுவையான கோதுமை பாயாசம் தயார்.
பால் பாயாசம்
தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி 150 கிராம், பால் 150 கிராம், மில்க்மைட் 100 சர்க்கரை, ஏலக்காய் ஒன்று முந்திரி 6.
செய்முறை : பாசுமதி அரிசியை கழுவி பாலில் நன்றாக குழைய வேக வைக்கவும். அத்துடன் மேல் கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இனிப்பு அதிகம் வேண்டும் என்பவர்கள் சக்தியை மேல் சர்க்கரையை மேலும் சேர்க்கலாம். கொதித்த பின் இறக்கி வைத்து ஏலக்காய் பொடி, முந்திரி துருவலையும் தூவலாம். சுவையான பால் பாயாசம் தயார்.
சீரக சம்பா பாயாசம்
தேவையான பொருட்கள் : 150 கிராம் சீரக சம்பா அரிசி, தண்ணீர் 1 லிட்டர், தேங்காய் பால் 2 கப், ஏலக்காய் 2, 300 உருண்டை வெல்லம், நெய் 2 ஸ்பூன்.
செய்முறை : சீரக சம்பா அரிசி நன்றாகக் கழுவி 2 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். பின்பு அரைத்து வைத்த தேங்காயை அரைத்து ஊற்றவும். பிறகு ஏலக்காய் பொடி செய்து கொதிக்கும் பாயசத்தில் போட வேண்டும். உருண்டை வெல்லம் நன்றாக பொடி செய்து, போட்டு கட்டியில்லாமல் கலக்க வேண்டும். இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை, இரண்டையும் கலந்து இறக்கினால், சுவையான சீரகசம்பா பாயாசம் தயார்.
ஜவ்வரிசி பாயாசம்
தேவையான பொருட்கள் : 150 கிராம் வெல்லம், 350 கிராம் ஜவ்வரிசி, தேங்காய் ஒரு மூடி, முந்திரி பருப்பு 50 கிராம், ஏலக்காய் 2 .
செய்முறை : அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொதிக்கும் போது, அரிசி போட்டு விடாமல் கிளர வேண்டும். அது வெந்ததும் வெல்லம் சேர்க்க வேண்டும். வாசனை வந்ததும் அடுப்பிலிருந்து சேர்த்து கிளற வேண்டும். நெய்யில் முந்திரி ஏலக்காய் வறுத்து போடுவதால் வாசனை கமகமக்கும். சுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார்.
பின் குறிப்பு : ஜவ்வரிசி பாயாசம், உப்புமா எதை செய்தாலும் வேகும்போது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க, வெறும் வாணலியில் லேசாக வறுத்து விட்டு செய்ய வேண்டும். போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் வாசனையாகவும் இருக்கும்.