பாயாசம் வெரைட்டிஸ் – 1 ..!
சுவையான அவல் பாயாசம், பச்சை பருப்பு பாயாசம், பச்சரிசி பாயாசம் பூஜைக்குரிய இந்த பாயசம் எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.
அவல் பாயாசம்
தேவையான பொருட்கள் : 200 அவல், முந்திரி 50, நெய் ஒரு ஸ்பூன், தேங்காய் பால் 2 கப்.
செய்முறை : முதலில் வெல்லத்தை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அவல் சேர்த்து வேக வைக்க வேண்டும். அவல் நன்றாக வெந்ததும், சில நிமிடங்களில் வெல்லத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, கடைசியாக முந்திரி சேர்த்து இறக்கினால், சுவையான அவல் பாயசம் தயார்.
அவல் பாயசம் 2
தேவையான பொருட்கள் : அவல் 200 கிராம், நெய் ஒரு ஸ்பூன், பால் 150 கிராம், முந்திரி 6 சர்க்கரை, 200 ஏலக்காய் 2.
செய்முறை : அவலை நெய் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வருத்த அவலை நன்றாக ரவை போல் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு பாலை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, நுணுக்கிய அவலை போட்டு வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து நன்றாக கரைந்தவுடன், மீதியுள்ள பாலை விட்டு கொதி வந்ததும் இருக்க வேண்டும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். சுவையான அவல் பாயாசம் தயார்.
பச்சைப்பருப்பு பாயாசம்
தேவையான பொருட்கள் : முந்திரி பருப்பு 10, நெய் 50 கிராம், பாசிப் பருப்பு 150 கிராம், சர்க்கரை 150 கிராம், ஏலக்காய் 2.
செய்முறை : அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பாசிப்பருப்பை சிறிது வறுத்து எடுக்கவும். அதில் நன்கு குழைய வேக வைக்கவும். பின்பு சர்க்கரையை சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு கொதிக்க வைக்கவும். இறக்கி நன்றாகக் காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி வறுத்த முந்திரியை போட்டு கலக்குங்கள். சுவையான பச்சை பருப்பு பாயாசம் தயார்.
பச்சரிசி பாயாசம்
தேவையான பொருட்கள் : அரிசி 200 கிராம், சர்க்கரை 1/2 கிலோ, முந்திரி தேங்காய் ஒரு மூடி, ஏலக்காய் 3, நெய் 2 ஸ்பூன்.
செய்முறை : பச்சரிசி ஊற வைத்து தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து 5 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் அரைத்த மாவை ஊற்றி அடி பிடிக்காமல் கிளறவும் நன்றாக வெந்ததும் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து போடவும். சர்க்கரை சேர்த்து கிண்டி, ஏலக்காய் பொடித்துப் போட்டு வெந்தவுடன் இறக்கினால், சுவையான பச்சரிசி பாயாசம் தயார்.