இராணுவ வீரர்களுக்காக ஆக்ஸிஜன் ஆலை அமைத்த தம்பதியர்கள்
சாமனியர்கள் தம்பதியினர் இருவர் முயன்று நமது சரித்திர பாதுகாப்பு படைக்கு என அங்கிகாரத்தை விதைத்துள்ளனர். இந்திய இராணுவத்தின் பாதுகாப்புக்காக ஏற்படுத்திய ஆக்ஸிஜன் ஆலை. சியாச்சின் பகுதியில் சிக்கலின்றி இராணுவ வீரர்கள் பணியாற்ற புனேவைச் சேர்ந்த தம்பதியர் யோகேஷ் மற்றும் திருமதி.சுமேதா சித்தாதே செய்த ஏற்பாடுகள் மெய் சிலிர்க்க வைக்கின்றது.
- சாமனியர்கல் சியாச்சினில் இந்தியப் பாதுகாப்பு படைக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.
மக்களின் பங்களிப்புடன் சியாச்சின் பகுதியில் ஆக்ஸிஜன் ஆலை அமைத்து சாதித்துள்ளனர்.
ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் இதுவரை பயன் பெற்ற இந்தியா இனிமேல் இந்தியத் தம்பதியினர் உருவாக்கிய ஆக்ஸிஜன் ஆலையில் 20,000 இராணுவ வீரகள் சுவாசிக்கலாம்.
புனேவைச் சேர்ந்த தம்பதியினர் செய்த அரும் பெரும் பணி
நாட்டின் பாதுகாப்பு விரர்களுக்கு என பிரச்சாரம் செய்து உயர்ந்த பணி மலையில் அவர்கள் செய்யும் தொண்டினை மக்களிடம் எடுத்து உரைத்துத் தம்பதியினர் விரிவுரைகள்மூலம் மக்களிடமிருந்து பங்களிப்பு பெற்று பாதுகாப்பு படைக்குப் பாதுகாப்பு செய்துள்ளனர்.
சியாச்சினில் தம்பதியர் அமைத்த ஆக்ஸிஜன் ஆலை
கண்கள் முழுவதும் கண்ணீர் பெருகுகின்றது. பாதுகாப்பு படை வீரர்களுக்காகத் புனேவைச் சேர்ந்த தம்பதியர் களத்தில் இறங்கி செய்த தொண்டானது நம்மைத் தலை வணங்கச் செய்துள்ளது.
மக்கள் பங்களிப்புடன் சுமார் 2 கோடி ரூபாய் நிதியை ஏற்பாடு செய்து சியாசின் மருத்துவமனையில், மிகவும் கடினமான பனி மலைப் பகுதியில் துணிந்து கடமையைச் செய்யும் நம் துணிச்சலான இராணுவ வீரர்களுக்கு ஆக்ஸிஜனை ஆலை அமைத்தனர்.
புனே தம்பதியர்கள்
நாட்டில் பாதுகாப்பு படையில் இருந்து துணிந்து பணியாற்றும் வீரர்களுக்காக ஆக்ஸிஜன் ஆலை அமைத்து இந்தியாவில் சுமார் 20,000 பாதுகாப்பு வீரர்கள் ஆக்ஸிஜன் பெற ஆலை அமைத்த்து அருமையான பணியாற்றிய புனே தம்பதியினரை நாடே தலை வணங்கி வாழ்த்துகின்றது.
பாதுகாப்புத்துறைக்கு பாதுகாப்பு செய்த தன்மை
புனேவைச் சேர்ந்த இந்த தேசபக்த தம்பதியினரால் நம் இராணுவத்தினர் சுவாசிக்க ஒரு வழியை உருவாக்கியுள்ளனர். புனேவைச் சேர்ந்த தம்பதியர் திரு .யோகேஷ் மற்றும் திருமதி.சுமேதா சித்தாதே தம்பதியர்கள் இணைந்து சியாச்சின் பாதுகாப்பு படை வீரர்கள் சுவாசிக்க ஒரு ஆக்ஸிஜன் ஆலையை உருவாக்கிய அந்த முயற்சியை இந்தியா தலை வணங்கி போற்றுகின்றது.
மிடில்கிளாஸ் தம்பதியினரின் பொறுப்புணர்வை பாராட்டிய பாரத பிரதமர்
இந்தியாவில் மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி நிதி திரட்ட ரூ .1.25 லட்சம் மதிப்புள்ள தன் நகைகளை விற்று பாதுகாப்பு படைவீரர்கள் சுவாசிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதனை கடந்த அக்டோபர், 2019 ஆம் ஆண்டு செய்து நாடே அவர்களை வாழ்த்தி வணங்கியது பாராட்டியது.
இந்தியாவில் இராணுவ விரர்கள் எண்ணிக்கை மேலும் பெருக வேண்டும். நாட்டுக்காகச் சேவையாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும். இந்திய தம்பதியினர் செய்த சேவையை நமது சிலேட்டுகுச்சி நினைவில் கூர்ந்து நன்றி செலுத்துகின்றது.
இந்தச் சேவையை நினைவுப் படுத்தி பகிர்ந்த முன்னாள் பாதுகாப்பு படைவீர்ரான திரு. முத்து அவர்களையும் தலைவணங்குகின்றோம்.