ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஓட்ஸ் அவல் பணியாரம்

மற்ற தானியங்களை விட ஓட்ஸ் உங்கள் வயிறு நிறையச் செய்து உங்களை திருப்தியாக்கும். உடல் எடையை குறைக்க படாதபாடு படுபவர்களுக்கு ஓட்ஸ் சிறந்த காலை சிற்றுண்டியாக விளங்குகிறது. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் மெதுவாக குறைக்கச் செய்கிறது.

முழு தானியங்களை தொடர்ச்சியாக உட்கொண்டு வருவதாலும் சர்க்கரை நோய் உருவாவது குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் இரத்த உறைவு ஏற்படுவதைத் குறைக்கின்றன. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன.

சருமத்தை பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். மன அழுத்தத்தை குறைக்க, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும். இதயகுழலிய நோய் இடர்பாட்டை குறைக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும். ஓட்ஸ் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓட்ஸ் அவல் பணியாரம்

தேவையான பொருட்கள் : ஓட்ஸ் ஒரு கப், அவல் ஒரு கப், கோதுமை மாவு ஒரு கப், பெரிய வெங்காயம் நறுக்கியது அரை கப், கேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன், அரிசி மாவு ஒரு ஸ்பூன், மிளகுத் தூள் ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய்-2, இஞ்சி பேஸ்ட் ஒரு ஸ்பூன், கடுகு கால் ஸ்பூன், எண்ணெய், நெய் தலா 50 மில்லி, உப்பு தேவையான அளவு.

செய்முறை : அவல், ஓட்ஸ் இரண்டையும் 30 நிமிடங்கள் ஊறவைத்து கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து வைக்கவும். ஊற்றி சூடானதும் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து கொட்டி இதனுடன் மிளகுத்தூள் சேர்த்து, உப்பு சேர்த்து மாவை கலக்கி வைக்கவும்.

அடுப்பில் பணியாரகல் வைத்து எண்ணெய் தடவி கல் சூடானதும் ஒவ்வொரு குழியிலும் இந்த கலவையை விட்டு திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் பணியாரம் ரெடி. மிதமான தீயில் இருபுறமும் திருப்பி போட்டு வேகவிடவும். தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லது தேங்காய் பால் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *