சபரிமலையில் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும் நாட்களில் ஐந்தாயிரம் பேர் சாமியை தரிசிக்கலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளனர்.
பத்து வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட பக்தர்கள் சாமியை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. தினசரி ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த பல மாதங்களாக மாத பூஜை நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்போது நடப்பு மண்டல மகரவிளக்கு சீசனில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அளித்த அறிக்கையின்படி, பக்தர்களுக்கான தரிசன விவரங்கள் கூறப்பட்டுள்ளன. நாள்தோறும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் மண்டல மகரவிளக்கு சீசனின் போது என்று சபரிமலையில் அறிவிக்கப்பட்டுள்ளன.