ஆன்லைன் கல்வி வகுப்புகள் வழக்கு ஒத்திவைப்பு
பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடங்கள் கற்பிப்பது தவிர்க்க முடியாது என்ற போதும் மாணவர்களுக்கு இது தேவையற்ற சுமையாக அமைந்துள்ளதாகவும், மலைப்பகுதிகளில், குக்கிராமங்களிலும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் ஆல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இணையதள சேவை குறைபாட்டால் பெரும்பாலான நேரங்களில் உரிய நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழல் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர். டிஜிட்டல் வழிக் கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன. மாணவ, மாணவியர் ஆபாச இணையத்தளங்களை அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரியும். மாணவர்களின் உடல்நலம் கருத்தில் கொள்ள கோரியும், தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் ஹேமலதா மற்றும் சுந்தரேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இணையதள சேவை குறைபாட்டால் ஆன்லைன் வகுப்பு நேரத்தை இரண்டு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்றும், தொலைக்காட்சியின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மின்சார தட்டுப்பாட்டால் குளறுபடி ஏற்படுவதாக தெரிவித்தனர்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிலாக பாடத்திட்டத்தை பள்ளியின் இணையதளத்திலோ அல்லது இமெயில் மூலம் அனுப்பி மாணவர்களை படிக்க வைக்கலாம். ஏற்கனவே ஆசிரியர்கள் பாடம் நடத்தி பதிவு செய்த வீடியோக்களை போட்டு காண்பிக்கும் வழியை பின்பற்றலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டன.
ஊரடங்கு பெற்றோர்கள் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் ஆன்லைன் வகுப்புகளுக்கு என்று பெற்றோர்கள் மாதம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் செலவழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டன. மத்திய அரசு சார்பில் தொடர்ந்து ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணர் டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்து விட்டதாக தெரிவித்தார்.
தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை உறுதி பட்ட பின்னரே, ஆன்லைன் வகுப்பு விதிமுறை வெளியிடப்பட்டுள்ளதாக மாணவர்களுக்கு எந்த ஒரு சமயம் ஏற்படாத வண்ணம் இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆகஸ்ட் 31ம் தேதிக்கு வழக்கு விசாரணை இது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டன.