ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு
கொரோனாவினால் டிசம்பர் வரை பள்ளிகள் திறக்கப்படாது கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளன. இதனால் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். பொறுமை, கனிவு, அளவான அறிவுரை, அவர்களுக்கான ப்ரைவசி நேரமும் முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
எதற்கும் கவலை வேண்டாம். உனக்காக எப்போதும் நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறுங்கள். இது மிகவும் முக்கியம். அதிக நேரம் ஆன்லைனில் இருக்கும் பிள்ளைகளுக்கு மனச்சோர்வு, உடல் சோர்வு ஏற்படும் என்பதை யதார்த்தமாக புரியவைத்து அவர்களுடன் மனம் திறந்து பேசி ரிலாக்ஸ் செய்யுங்கள்.
உடல் நலமும், மன நலமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. மன நலத்தை பேணிக் காக்க ஆன்லைன் கவுன்சிலிங் மையங்கள், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் இருக்கின்றன. தேவையான தருணத்தில் ஹெல்ப்லைன் பயன்படுத்தி உங்கள் மனநிலையை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மன ஆரோக்கியத்தில் பயம், கட்டுப்பாடு, இழப்பு, சலிப்பு எதிலும் ஆர்வம் இல்லாமை, தனிமை, மனச்சோர்வு, ஆபத்தான செயல்களில் ஈடுபடுதல், எலக்ட்ரானிக் சாதனங்களின் அடிமை இவற்றால் பாதிக்கப்பட்ட எதிர்வினைகள் அதிகமாகி மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இவற்றை தவிர்ப்பதற்கு மாணவர்கள் கடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அசாதரண சூழல் விளைவாக ஏற்படும் மன அழுத்தம் இயல்பானது தான் என்பதை உணர வேண்டும்.
மாணவர்கள் தங்களை தரக்குறைவாக நினைப்பதோ அல்லது மோசமான நிலையை கண்டு வெட்கப்பட தேவையில்லை. நமக்குத் தேவை தெளிவு மட்டுமே. மனச்சுமை அல்லது மன பாதிப்பு உங்களையும், மற்றவர்களையும், உங்களை சுற்றி இருப்பவர்களையும் பெரும் ஆபத்தில் சேர்த்து விடக்கூடாது என்பதில் மாணவர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காலகட்டம் தற்காலிகமானது தான் என்பதை உங்களுக்குள்.
உரக்கச் சொல்லுங்கள். முழுமையாக உணருங்கள். மனநலத்தை பாதுகாத்துக்கொள்ள கோப்பிக் மெக்கானிசம் என்று சொல்லக்கூடிய சமாளிக்கும் உத்திகளை கையாள்வதன் மூலம் மாத்திரை மருந்துகள் இல்லாமலே பாதுகாத்துக் கொள்ளலாம். அன்றாட பணிகளை கடைபிடித்தல். நல்ல தூக்கம், நண்பர்களுடன் தொடர்பு, ஓய்வு எடுத்துக் கொள்ளுதல் அவசியம். நான்கையும் செய்யும் போது நல்ல மன நலத்துக்கு வேண்டிய இயற்கையாக மூளைக்கு தேவைப்படும் வேதிப்பொருட்களை உருவாக்க முடியும்.
மற்றவர்களுக்கு உதவி செய்வது, புத்தகம் வாசிப்பது, தன்னார்வலராக இருப்பது, இசை கேட்பது, வரைவது, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, சின்ன சின்ன விஷயங்களையும் கொண்டாடுவது என்று தினமும் உங்களுக்கு பிடித்த வேலைகளை எடுத்து செய்து வரவேண்டும். மனசுக்கு பிடித்த அவர்களுடன் அன்பாக நேரத்தை செலவிடுவது.
விளையாடுவது, மற்றவர்களை வாழ்த்துவது என இனிய செயல்களை செய்ய வேண்டும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். வாய்விட்டு சிரிப்பதன் மூலம் நல்ல நகைச்சுவைகளை பரிமாறிக்கொள்வது, தியானம், யோகா மிதமான உடற் பயிற்சியின் மூலம் மனதையும், சிந்தனையையும் தெளிவாக வைக்க முடியும்.