ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் எப்படி உணர்கிறார்கள்.
கொரோனாவினால் அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக விலகல், தனிமைப்படுத்துதல், பள்ளி கல்லூரிகள் மூடல், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மாணவர்கள் விடுதி வளாகங்கள் மூடல், சக மாணவர்களுடன் பேசி பழக முடியாத சூழல்.
நேரடி வகுப்புகளுக்கு பதில் ஆன்லைன் வகுப்புகள் தினசரி வாழ்வில் மிகப்பெரிய மாற்றம். இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய பட்டமளிப்பு விழா, எதிர்காலத்தைப் பற்றிய பயம், விழாக்கள் ரத்து என நீள்கிறது பட்டியல். மாணவர்களின் மனநலம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு, அடிக்கடி வெளியில் செல்வதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது மாணவப்பருவம். இந்த தொற்று மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாறி இருப்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இடையூறுகள் பல வந்தாலும் அதற்காக மனத்தெளிவு கொண்டவர்கள் துன்பத்திற்கு துன்பம் உண்டாக்கி அதனை போக்கி விடுவார்கள். இந்தியா முழுவதும் 60% மக்களின் மன நலம் காரணமாக பாதிப்படைகிறது. இன்று இந்தியா அமைப்பு நடத்திய ஏப்ரல் மே 2020 ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பலதரப்பட்ட வயதினரும் பெருமளவில் பாதிப்படைகின்றனர். குறிப்பிடத்தக்க பிரிவினராக 18 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். எனவே கல்லூரி மாணவர்கள் தங்கள் மனநலத்தை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வது காலத்தின் தேவையாக மாறி இருக்கின்றன.
உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிப்புகளால் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் வீட்டில் இருக்கிறார்கள். தினமும் பல மணிநேரம் ஆன்லைன் வகுப்புகள் தேர்வுகள் என நாட்கள் நகர்கின்றன. ஆனால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாமல், நண்பர்களுடன் பழக முடியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
சமூக தொடர்பில்லாத நிலையில் மனச்சோர்வும். அதையடுத்த உடல் சோர்வும் அவர்களுக்கு இவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழி காட்டுதல் தான் இப்பதிவு, சென்ற பதிவு.