கல்வி

தமிழக அரசின் உயர்கல்விதுறை அதிரடி முடிவு

தமிழக அரசின் உயர்கல்வி துறை தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்தது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த முடிவை உயர்கல்வித்துறை எடுத்துள்ளதாக அறிவித்தது.

பிளஸ் 2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டவுடன் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமே கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டன.

இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு கல்லூரிகளில் முதலாமாண்டு சேரும் மாணவர்களின் நிலை பரிதாபமாக இருந்தன.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வராத சூழ்நிலையில் தேர்வு முடிவுகள் வந்தாலும் எப்பொழுது முதலாமாண்டு மாணவர்களுக்கான அட்மிஷன் தொடக்கம் என்பது தெரியாமல் இருந்ததால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாததால் எப்போது திறக்கும். என்பது குறித்த தகவல் இன்னும் அரசிடமிருந்து வெளிவராததாளும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் உயர்கல்விதுறை அதிரடி முடிவு.

அறிவியல் கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அரசு தற்போது முடிவெடுத்தது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *