தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் அமல்!
அக்டோபர் 1 முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’, திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் பிற மாநிலத்தவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இயலும்.
ரேஷன் பொருட்கள் வாங்கச் செல்லும் நபரின் பெயரானது ரேஷன் அட்டையில் இருத்தல் அவசியம். அவரின் கைரேகை பதிவு செய்தபிறகு அவருக்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
இதற்கான இயந்திரங்கள் இன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்திற்காக வெளிமாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில் மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ள நிலையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை அக்டோபர் 1 தொடங்கி வைக்கிறார்.