மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் ஓணம் பண்டிகை கேரளாவில் தொடங்கியது
உலகமெங்கும் வாழும் மலையாளிகள் ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பண்டிகைகளும், விழாக்களும் கலை இழந்து காணப்பட்டுள்ளன. இந்த வகையில் ஓணப் பண்டிகைகளும் வழக்கமான உற்சாகம் இல்லாமல் காணப்படுகிறது.
பள்ளி கல்லூரிகளில் ஓணம் பண்டிகை விழாக்களும், போட்டிகளும் அத்த பூக்கோலம் அமைத்து மாணவ, மாணவியர், பெண்கள், குழந்தைகள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் பண்டிகை கொண்டாட்டங்கள் தீவிரம் அடையவில்லை.
ஆண்டு தோறும் அஸ்த நட்சத்திர நாளில் தொடங்கி பத்தாம் நாள் திருவோண நட்சத்திரத்தன்று ஓணம் பண்டிகை நிறைவு பெறும். இந்த வகையில் இந்த ஆண்டு அஸ்தம் நட்சத்திரம் தினமாக நேற்று இரவு கேரளாவில் ஓணம் திருவிழா தொடங்கியுள்ளன. வரும் 31ம் தேதி ஓணப்பண்டிகை கொண்டாடப்படுகின்றன.
நாட்டு மக்களை காண வருகின்ற மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்வு. கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். மக்கள் வீடுகளையும், தெருக்களையும் அத்த பூக்கோலம் அமைத்து அலங்கரிப்பது ஓணம் பண்டிகையின் வெகு பிரசித்தம் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஓணம் தற்போது கொரோனா பரவலால் கலை இழந்துள்ளது, கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை தொடங்கியுள்ளன. தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கின.
கேரளாவில் பத்து நாட்கள் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும். அரசு சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் தற்போது இந்த கோலாகலம் குறைந்துள்ளன.