சினிமா

ஓடிடியில் வெளியாகும் ஓணம் பண்டிகை ஸ்பெஷல் திரைப்படங்கள்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுக்க ஐந்து மாதங்கள் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது டிஸ்னி + ஹாட் ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் என ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல மொழிகளிலும் திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பண்டிகைகள் என்றாலே அதில் திரைப்படங்களும் ஒரு அங்கம் என்பதை எவராலும் மறுக்க இயலாது. இந்நிலையில் திரையரங்குகள் மூடிக்கிடக்கும் இன்றைய சூழலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடும் வகையில் 3 படங்களை வெளியிடுகின்றன.

ஓடிடி தளங்கள் இதிலும் பண்டிகை தினங்களில் திரையரங்குகளை போலவே திரைப்படங்களை வெளியிடும் முறையும் வழக்கமாகி வருகின்றன. இந்த வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு “சி யூ சூன்”, “மணியாறாயில் அசோகன்”, “கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்” ஆகிய மூன்று மலையாள திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

“சீ யூ சூன்” முழுக்க ஊரடங்கு நாட்களில் உருவாக்கப்பட்ட திரைப்படம். பகத் பாசில் தயாரிப்பில் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கின்றன. வெப்கேமரா, இணையத்திலேயே முழு திரைப்படத்தையும் படமாக்கி இருக்கின்றனர்.

பகத் பாசிலுடன் ரோஷன் மேத்யூ தர்ஷனா ஆகியோர் நடித்திருக்கும் “சீ யூ சூன்”, அமேசான் பிரைம் இல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகின்றன.

“கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்”, திரைப்படம் சாலைப் பயணத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம். டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் வருகிற 31-ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை நடிகர் டொவினோ தாமஸ் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அனுபமா பரமேஸ்வரன், கிருஷ்ண சங்கர் நடித்துள்ள “மணியாறாயில் அசோகன்”, திரைப்படத்தை வரும் 31ம் தேதி நெட் பிளிக்ஸ் வெளியிடுகிறது. முழுக்க முழுக்க காதல் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *