அன்பு மனைவிக்காக தன் வீட்டையே ஐசியூ வாக மாற்றிய கணவர்
கடந்த நான்கு ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த குமுதானி. தற்போது தன் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறும் வகையில் முழு வசதியுடன் உருவாக்கித் தந்திருக்கிறார் கணவர் கியான் பிரகாஷ். இவரது மனைவி நலம் பெற வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

- நோயுற்ற மனைவிக்காக வீட்டை அவசர சிகிச்சை யூனிட்டாக மாற்றிய கணவர்.
- 74 வயதான கியான் பிரகாஷ் ஓய்வு பெற்ற பொறியாளர்.
- மத்தியபிரதேசம் ஜபல்பூரில் வசிக்கும் குமுதானி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்க நினைத்த அன்பு கணவர். தன்னுடைய வீட்டையே முழு வசதியுடன் ஐசியு மருத்துவ அறையாக மாற்றி விட்டார். தன் மனைவிக்காக மருத்துவ உதவிகளை பேரன்புடன் ஒவ்வொரு நொடியும் செய்து வருகிறார்.

இவர் எந்த மருத்துவப் பயிற்சியும் கிடையாது என்றாலும் மனைவிக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் வழங்கி வருகிறார். தனது காரையும் கூட ஆம்புலன்ஸ் ஆக மாற்றி விட்டார். இந்த தம்பதியின் இவர்களது மகளும், மகனும் தினமும் வீடியோகால் மூலம் பெற்றோர்களுடன் பேசி வருகிறார்கள். இருவரும் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள்.
