சினிமாசின்னத்திரை

பின்னணி பாடகர் மற்றும் முன்னாள் நடிகையின் கணவர் ஏ எல் ராகவன் மறைந்தார்

எங்கிருந்தாலும் வாழ்க:

எங்கிருந்தாலும் வாழ்க என்ற பாடலைப் பாடிய ஏ. எல். இராகவன் இன்று காலமானார். அய்யம்பேட்டை லக்ஷ்மணன் ராகவன் (எ) ஏ. எல். இராகவன் உடல் நலம் சரியில்லாததால் 19 ஜூன் 2020 காலமானார்.

ஏ. எல். இராகவன் பின்னணிப் பாடகராக அனைவருக்கும் தெரிந்தவர் எம். என். ராஜமின் கணவர் ஆவார். இவர் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். உலகிற்கு அறியாத ஒரு முகமும் இவருக்கு உண்டு. பன்முக வித்தகராக திகழ்ந்தவர்.

நடிப்பில் ஆர்வம் கொண்ட ஏ. எல். இராகவன் பாய்ஸ் கம்பெனியில் ராஜ பாட்டாக வேடம் கட்டி ஆடினால் எம்ஜிஆர் தான் பெண் வேடத்தில் துணை நடிகையாக ஆடுவாராம். நாடகக்கலை மட்டுமல்லாமல் இசைக் கலையிலும் வித்தகர் ஆவார். 

ஏ.எல் ராகவன்:

மிருதங்கம் அடிப்பதும் வயலின் வாசிப்பதும் என பல வித்தைகளில் கைதேர்ந்தவர். திரை உலகில் வந்த புதிதில் அவரின் குரல் பெண்ணின் குரல் போல இருந்தது. அதை அவர் குறையாக கொள்ளாமல் திரையுலகில் கோரஸ் பாடகிகளுடன் பெண் குரலில் பாடியுள்ளார்.

ஏ. எல். ராகவன் அவர்களின் விடாமுயற்சியால் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அவருக்கு வசந்த காலமாக அமைந்தது. 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

ஆண்களுக்கு இருக்கும் ஸவுண்டு குரலில் பல பாடல்கள் வந்த நிலையில் அவர்களுக்கு நடுவில் மென்மையான குரலில் பாடி அசத்தியவர் ஏ. எல். ராகவன். நக்கல் நையாண்டி கலந்த பாடல்கள் குறிப்பாக காமெடி கிங் நாகேஷ் கதாபாத்திரத்திக்கு வரும் பாடல்கள் மற்றும் வெஸ்டர்ன் கிளப் டான்ஸ் பாடல்கள் என்றாலே ஏ. எல். ராகவனை தான் அழைப்பார்கள்.

ஏ. எல். இராகவன் எங்கிருந்தாலும் வாழ்க, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் எக்கோ எபெக்ட்டை தன் குரலின் மூலமாகவே தந்து முன்னொடியாக விளங்கியவர்.

ஹிட் பாடல்கள்:

திரையுலகில் பாடகராக தடம்பதித்த இவர் தயாரிப்பாளராக இறங்கினார். அவர்  தயாரித்த படத்தில் 5 இசை அமைப்பாளரை கொண்டு பாடல்களை தயாரிக்க; பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது ஆனால் படம் ஹிட்டாக வில்லை என்பது வருத்தம்.

மேடை நிகழ்ச்சிகளை பிரபலமாக்கியது ஏ. எல். ராகவன். எங்கிருந்தாலும் வாழ்க பாடல் மிகவும் பிரசித்தி பெற்ற மேடை பாடலாக அமைந்தது. இன்று வரை இவரின் குரல் போன்ற பாடுவதற்கு யாரும் இல்லை என்று சரித்திரம் படைத்தவர்.

2020 இருண்ட வருடமாக மேலும் அமைகிறது. திரையுலகம் மேலும் ஓர் இழப்பை சந்தித்துள்ளது பின்னணிப் பாடகராக விளங்கிய பன்முக வித்தகர் ஏ.எல். ராகவன் இன்று மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *