ஓ மை கடவுளே செகண்ட் ஹீரோயின் போட்டோ ஷூட்
ஓ மை கடவுளே படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் அசத்தியவர் வாணி போஜன். வாணி போஜன் ஃபேஷன் மாடலாக உருவெடுத்து பின்பு சின்னத்திரையில் சீரியல் தொடர்களில் நடித்து வரலானார்.
தெய்வமகள் சீரியலில் சத்தியமாக உருவெடுத்த வாணி போஜன் சின்னத்திரை ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்காது. சன் குடும்பத்தில் ஒருவராக இவர் சன் குடும்பத்தின் விருதுகளில் சிறந்த கதாநாயகிக்கான விருதைப் பெற்றவர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தெலுங்கு திரையுலகம் மூலம் தடம் பதித்தார். 2019 மீக்கு மாத்திரமே செப்த்தா படத்தில் தருண் பாஸ்கர் தஸ்யம் துணையாக முன்னணி கதாநாயகியாக நடித்தார் வாணி போஜன். இப்படத்தை தெலுங்கு திரையுலகின் பிளேபாய் விஜய் தேவரகொண்டா தயாரித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் ரொமான்டிக் காமெடி படமான ஓ மை கடவுளேவில் வாணி போஜனின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அசோக் செல்வன் ரித்திகா முன்னணி ஜோடியாக நடிக்க மீரா என்ற கதாபாத்திரத்தில் வாணிபோஜன் செகண்ட் ஹீரோயினாக எதார்த்தமாக நடித்திருந்தார்.
வெள்ளித்திரையில் நடித்த நடிப்பு சின்னத்திரையில் பெரிதாக வரவேற்கப்பட்டு தற்போது விஜய் டிவியில் ஜட்ஜாக பல நிகழ்ச்சிகளில் வருகிறார். ரோபோ ஷங்கர் ஈரோடு மகேஷுடன் இணைந்து கலக்கப்போவது யாரு ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு இவர் ஜட்ஜாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கில் வீட்டினுள்ளேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க சமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்காக இருப்பதோடு வாழ்க்கையின் பங்காக மாறிவிட்டது. பிரபலங்களின் அனைத்து அப்டேட்டும் சமூக வலைத்தளங்களில் பார்த்து மகிழலாம்.
அதேபோல் இவரின் போட்டோஷூட்டும் பிரமாதமாக வந்துள்ளது. நமது மரபில் புடவை கட்டிக்கொண்டு இருந்தாலும் செமையா போஸ் கொடுத்து இருக்காங்க. திரையுலகின் பிரபல திற்காக மாடர்ன் ஆடை அணிந்திருந்தாலும் வாணி போஜன் சூப்பர் ஹிட்.