குழந்தை திருமணங்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய அதிகாரி
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. மண் காட்டுசேரி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் அங்கராவரம் பகுதியை 16 வயது சிறுமி.
மூவருக்குமே கட்டாய குழந்தை திருமணம் நடைபெற இருப்பதாக அந்தந்த பகுதி காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவல். நடவடிக்கை மேற்கொண்ட சமூகநலத்துறை அதிகாரிகள் அனைத்து சிறுமிகளையும் மீட்டெடுத்தனர்.
மீட்டெடுத்த சிறுமிகளை அனைவரையும் அரசு காப்பகங்களில் ஒப்படைத்தனர். வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நடைபெற இருந்த நான்கு குழந்தை திருமணங்களை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞருக்கும், நேற்று காலை பள்ளி கொண்டா பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் கட்டாயத் திருமணம் நடைபெற இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள்.
சிறுமியை மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகத்தில் ஒப்படைத்தார்கள். மேலும் அந்தச் சிறுமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் நான்கு குழந்தை திருமணங்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய அதிகாரிகளை பாராட்ட வேண்டும்.