சென்னையில் செவிலியர்கள் போராட்டம் செவிசாய்க்குமா அரசு!
இன்று காலை 10 மணி அளவில் சென்னை மெரினாவில் எம் ஆர் பி அமைப்பை சேர்த்த 3000 செவிலியர்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 2015 இல் 3000 செவிலியர்களை ஒப்பந்தம் முறையில் வேலையில் சேர்க்கப்பட்டார்கள்.இந்த நிலையில் 6 வருடங்கள் ஆகியும் வெறும் 2000 நபர்களுக்கு மட்டும்தான் கொடுத்துள்ளனர். அத்துடன் வேலை நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தமுறையில் செவிலியர்கள்
ஆனால் மீதமுள்ள 15000 நபர்களுக்கும் இன்றும் ஒப்பந்தம் முறையில் இன்றும் 14000 உதியங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதில் இந்த கொரோன காலத்தில் எம்ஆர்பி மருத்துவாணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் மற்றும் உதிய உயர்வை தரக்கூறி தர்ணா போராட்டத்தில் இடுப்பட்டு வருகின்றனர்.
விடுப்பு இல்லாத செவிலியர் வேலை
இவர்களுடைய மிக முக்கியமான கோரிக்கையாக இருப்பது 24 மணி நேரமும் மருத்துவம் மற்றும் மகப்பேறு சிகிச்சை சேவை செய்யும் நமது செவிலியர்களுக்கு மகப்பேறு காலம் மற்றும் உடல்நலம் சரியில்லாத நேரத்திலும் கூட ஒப்பந்த செவிலியர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் எந்த விடுப்பும் அளிக்கப்படுவதில்லை.
எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதே இவர்களின் மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாகவும் உள்ளது. இவர்களின் தேவை என்பதை ஆவண செய்ய வேண்டியது சம்மந்தப்பட்ட துறையின் கடமையாகும்.
சென்னை – ஒப்பந்த செவிலியர்கள் தர்ணா போராட்டம்
காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் ஆகிய பிரதானக் கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 13 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் 2 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரை அருகே சுமார் 3 ஆயிரம் ஒப்பந்த செவிலியர்கள் கூடி பணி நிரந்தரம் மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரட்டினர். அங்கு அமர்ந்து சுமார் 3 ஆயிரம் ஒப்பந்த செவிலியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
செவிலியர் நர்ஸ் கொடுத்த பேட்டி விவரம்
இது குறித்து பேட்டியளித்த ஒப்பந்த செவிலியர் ராதா மணி, கொரோனா காலம் மட்டுமல்லாமல் பகப்பேறு உட்பட பல்வேறு அத்தியாவிசிய சூழல்களிலும் நிரந்த செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களும் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். மேலும், 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் சம வேலை செய்யும் செவிலியர்களின் பணியை ஆராய்ந்து சம ஊதியம் 6 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையிலும் தங்கள் நிலைக்கு தமிழக அரசு எந்த ஒரு தீர்வையும் அறிவிக்காமல் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
ஒப்பந்த அடிப்படையில் காலம் கடந்தும் பணிச்சுமை
மேலும், 2 ஆண்டுகளில் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவார்கள் என நியமன ஆணையில் அறிவித்துவிட்டு 6 ஆண்டுகளை கடந்தும், பல்வேறு போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் மூலம் எடுத்துக் கூறியும் 11 ஆயிரம் செவிலியர்களுக்கு மேல் இன்னும் 14 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாழ்வாதரம் கருதி போராட்டம்
தொடத்ந்து பேசிய அவர், தங்களது வாழ்வாதாரப் பிரச்சனைகளை எடுத்துரைக்கவே இந்த போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தங்களின் குரலுக்கு செவிசாய்த்து தங்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.