நவம்பர் 2 ஆந்திர பள்ளிகள் திறக்கப்படும்!
ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருக்கின்றார். பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளிடம் பேசினார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பள்ளிகள் திறப்பது குறித்து நீண்ட ஆலோசனையை நடத்தி தகவல் தெரிவித்திருக்கின்றார்.
பள்ளிகள் திறக்க முதல்வர் ஆலோசனை
கொரோனா நோய் தொற்று காரணமாக நீண்ட பொது முடக்கம் பின்பற்றப்பட்டது. இதனை அடுத்து வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் ஏற்கனவே அறிவித்திருந்தாலும், மாணவர்களுக்கு சீருடைகள் வழங்குவது பாடபுத்தகங்கள், காலணிகள் போன்றவை வழங்குவது குறித்து பேசப்பட்டு வந்தது.
நவம்பர் 2 இல் பள்ளிகள் திறக்கப்படும்
கொரோனா குறைய வேண்டும் என்பதால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஜெகன்மோகன் ரெட்டி நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.
பள்ளிகளில் பாடப்புத்தக உபகரணங்கள்
அக்டோபர் ஐந்தாம் தேதி மாணவர்கள் பாட புத்தகங்களை மாணவர்களுக்கான உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும். மாணவர்கள் பெற்றோர்கள் மூலமாக வந்து பெற்றுக்கொள்ளலாம். நவம்பர் இரண்டாம் தேதியிலிருந்து பள்ளிகள் முறையாக இயங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள்குறித்து அரசு அறிவிக்கும் என்று அறிவித்திருக்கின்றார்.
பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை போல், நாடு முழுவதும் மாணவர்களுக்குத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு அறிவித்து வந்தாலும் முழுமையாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருக்கின்றது. காரணம் பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் கூடுவதால் கொரோனா சுகாதாரத்தை கடைபிடிப்பதன் சிக்கல் வருமோ என்று ஆலோசனையில் அரசு இருக்கின்றது.
கொரோனாவால் ஆன்லைனில் பள்ளிகள்:
நாட்டில் கொரோனா வேகம் குறைந்தால் நன்றாக இருக்கும் என்று அரசு எதிர்நோக்கி இருக்கின்றது. அதனை வைத்து ஆன்லைன் வகுப்புக்கள் நடத்துப்படு வருவதால் மாணவர்கள் படிப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் இதுவரை ஆன்லைனிம் படிக்காமல் புதிதாக தொடர்ங்கியிருப்பதால் இந்த முறைக்கு மாணவர்கள் தங்களை ஈடுப்படுத்திக் கொள்ள தடுமாறிவருகின்றனர். கூடிய விரைவில் அரசு இதற்கு ஒரு நல்ல அறிவிப்பை அறிவிக்கும் என்று மாணவர்கள் எதிர் நோக்கியிருக்கின்றனர்.