ஆன்லைனில் பர்ச்சேஸ் செய்பவர்கள் கவனத்திற்கு
பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங் இன் போது கேஷ் ஆன் டெலிவரி பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. பொருள்களை சரிபார்த்து பின் பணம் செலுத்துவது நல்லது. இணையதளத்தில் பொருட்களை வாங்கியதும் அதை உறுதிப்படுத்த உங்களது மெயில் முகவரிக்கு தகவல் அனுப்புவார்கள். இத்தகவலை பொருள் கைக்கு வரும்வரை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
விலை உயர்ந்த மின்சாதன பொருட்களை வாங்கும் முன் துறை சார்ந்தவர்களிடம் அந்த ஆன்லைன் தளத்தில் வாங்கலாமா என்று விசாரித்த பிறகு தான் வாங்க வேண்டும். அவசரகதியில் ஆர்டர் செய்வது பெரும் தவறு. எப்போதுமே ஆர்டர் செய்யும் போது assured என்ற முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தின்பண்டங்களையும், குளிர்பானங்களையும் ஆர்டர் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடவும்.
மின்சாதன பொருட்களை 15 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் பதிவு செய்த நொடியிலிருந்து அந்த கால அவகாசம் தொடங்கிவிடும். உங்களிடம் வந்து சேர்ந்த நாளிலிருந்து துவங்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்டர் செய்யும் போது பிற வாடிக்கையாளர்கள் எதிர்கருத்து வைத்துள்ளனர் என்பதை பார்ப்பது நல்லது. அதே போல் rating பார்ப்பதும் அவசியம்.
நீங்கள் ஒரு பொருளை ஏற்கனவே வாங்கி இருந்து அதை பரிசோதிக்க விரும்பினால் logo சரியான இடத்தில் உள்ளதா என்பதை இணையத்தில் நம்பத்தக்க பக்கங்களை பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அச்சு அசல் அதே போல் இருந்தாலும் அது போலியாக இருக்க வாய்ப்பு உள்ளன. சமீபத்தில் புதிதாக வெளியான ஒரு பொருளை அதிக தள்ளுபடி தருகிறார்கள் என்றால் அதுவும் போலியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
அப்படி அது ஒரிஜினல் மாடல் என்றால் கூட காலாவதி ஆகி விட்டால் அதை விற்றுத் தீர்க்க தள்ளுபடி அளிக்கப்படலாம். ஆனால் அரிதாகத்தான் இப்படி நடக்கும். எனவே ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக கவனத்துடன் ஈடுபடுங்கள். அதிரடி தள்ளுபடி என்றாலே உஷாராகி கொள்ளுங்கள். இந்த இக்கட்டான காலகட்டத்தில் நேரடியாக கடைக்கு சென்று பொருட்களை வாங்கினாலும் பலர் ஆன்லைனில் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒருவழியில் மக்களின் சிரமங்களை குறைத்தாலும், தரம் சார்ந்த பிரச்சினையை மக்கள் சந்திப்பது வாடிக்கையாகி வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தை விட்டுவிட்டு மிக குறைந்த விலையில் எங்கு கிடைக்கிறது என அதன் பக்கம் மக்கள் அலை மோதுவது இந்த பிரச்சினைக்கு காரணம். இதை தவிர்க்க வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. எனவே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் முன் இதை கவனித்து வாங்க வேண்டும்.