டிஎன்பிஎஸ்சி

பரிதிமார் கலைஞர் தமிழ்வாழ்வுடன் டிஎன்பிஎஸ்சி குறிப்புகள்!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றியை பெற தமிழ் பாடத்தின் அவசியத்தினை உணர்ந்து தேர்வுக்கு முன்பு முதல் அனைவரும் படிக்க தொடங்கியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

போட்டி தேர்வினைப் பொருத்தமட்டில் தேர்வுக்கு தொடர்ந்து படித்தலுடன் தேர்வினை வெல்ல  தொடர்ந்து படித்தவற்றை திருப்பி படிக்க வேண்டும். அதனை படித்தலுடன்  நீங்கள் படித்த பாடங்கள் சரிதானா என பரிசோதித்து  பார்த்து கொள்ளுங்கள்.  படித்தவற்றில் சந்தேகம் மற்றும் மறதி  இருந்தால் அதனை சரி செய்யுங்கள். 

எண்ணங்களில் உறுதி தன்மை வேண்டும்: 

உறுதியான எண்ணங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும்.   உறுதியான எண்ணங்கள் தான் செயல்பட வைக்கும்.  வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்  தொடர்ந்து செயல்பட வைக்கும். 

கவனம்: கவனமுடன் ஒருநிலைப் படுத்தி படிக்கும் பொழுது மறதி தன்மை வளராது.  புத்திசாலிதனம் வளரும் அத்துடன்  படிக்க வேண்டியதை சார்ட் கட் வழியில் எளிதாக எப்படி படிப்பது என்பது குறித்து சுயமாக தெரிந்து கொள்ளலாம். 
இவ்வாறு படிக்கும் பொழுது புத்தியும் மனதும் ஒரு நேர்கோட்டில் இருக்கும் பொழுது செய்யும் வேலை எளிதாக முடியும். தமிழ்  உரைநடை  குறிப்புகளுடன் கேள்வி பதில்கள் கொடுத்துள்ளோம் படியுங்க தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம். 

பரிதிமாற் கலைஞர்:

பரிதிமார் கலைஞர் குறிப்புகள்:மதுரை மாவட்டம்  விளாச்சேரி, தந்தையார்- விளாச்சேரி கோவிந்த சாஸ்திரி 


பரிதிமார் கலைஞரின் இயர்பெயர் சூரிய நாரயண சாஸ்திரி ஆகும்.  தமிழ் பற்றால் தன் பெயரை பரிதி சூரியன் மால், கலைஞர் என மாற்றிக் கொண்டார். 


1892 வேதாந்த தத்துவ சாத்திர பல்கலைகழக முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். 


கல்லுரி ஆசிரியட், புலவர், நாடக  ஆசிரியர், நடிகர், ஆராய்ச்சியாளர, பத்திரிகையாசிரியர், பதிப்பாசிரியர் என தமிழுக்கு உழைத்தார். 


நாடகவியல் என்னும் இலக்கண நூலை எழுதினார் தற்பொழுது உள்ள முதல் நாடக நூல் இதுவாகும். 
சோனட் போன்ற 14 அடி ஆங்கிலப் பாட்டு போனு தமிழில் பாடல்கள் எழுதி   அதற்கு தனி பாசுர்த்  தொகை பெயரிட்டார். 


ரூபாவதி அல்லது காணாமல் மகள், கலாவதி என்ற நாடகங்களை இயற்றி மேடை ஏறினார். 
சித்திரகவி என்ற நூலை எழுதியுள்ளார். 
சேரமான் கணைக்கால் இரும்பொறை பற்றிய அங்கம் என்ற நாடக வகைக்கு மான விஜயம் என்ற நாடகத்தை எழுதினார்.

தமிழை உயர்தனிச் செம்மொழி என முதன் முதலாக நிலைநாட்டி பெருமிதம் கொடண்டார். 
பரிதிமார் கலைஞர் தன்னுடைய நாடகங்களில் கலாவதி மற்றும் ரூபாவதியாக நடித்தார். 
தமிழ்மொழியின் வரலாறு எழுதினார். இது தமிழில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி உணர்வோடு எழுதப்பட்ட  முதல் நூல்  மதிவாணன் புதினம் இயற்றி சி.வை தாமோதர பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க செந்தமிழ் நடையில் புதினத்தை உருவாக்கினார்.

 
கலிங்கத்துப் பரணி நள வெண்பா என்ற  தமிழ் இலக்கிய நூல்களை புதிப்பித்தார். 
எம்.எஸ்.பூரணலிங்கம்த்துடன் சேர்ந்து  ஞானபோதினி என்ற இதழில் ஆசிரியராக இருந்தார். 


உயர்தனிச் செம்மொழி, தகுந்தவை தங்கி நிற்றல் என்ற கலைச் சொற்களைப் படைத்தார். மேலும் தமிழை உயர்தனிச் செம்மொழி என  முதன் முதலாக நிலைநாட்டினார்.
வினா- விடைகள்: 

1. தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி உணர்வோடு பரிதிமார் கலைஞர் எழுதிய நூல் யாது?

2.  கலாவதி மற்றும் ரூபாவதியாக நடித்தவர் யார்?

3. சேரமான்காதலி கணைக்கால்  இரும்பொறை பற்றிய அங்கம் என்ற நாடக வகை எழுதியது யார்?
4. சித்திரகவி என்ற நூலை எழுதியவர் யார்?
5. நாடக முதன் நூல் யாது?
6 பரிதிமார் கலைஞர் வெளியிட்ட பாசுரத் தொகையின் பெயர் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *