நோரோ வைரஸால் நொந்துபோன கேரள மக்கள்…
கொரோனா, ஜிகா ,தக்காளி காய்ச்சல், குரங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் இவை அனைத்தையும் தொடர்ந்து தற்போது கேரளாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் கேரளாவை லேசாக தட்டி பார்த்த நோரோ வைரஸ் இப்போது மீண்டும் வந்துள்ளது. புதுசு புதுசா வைரஸ் நோயால் நொந்துபோன கேரள மக்கள் தற்போது தான் சிறிது நிம்மதியடைந்தனர். ஆனால் மீண்டும் அவர்களுக்கு பீதியை கிளப்பும் வகையில் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியில் 2 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் ஏற்பட்டுள்ளது.
நோரோ வைரஸ் பாதிப்புகள்
நோரோ வைரஸ் பாதித்தவர்கள் உடன் நெருக்கம் காட்டுதல்,பாதித்த பொருட்களை தொடுதல் போன்றவற்றால் பரவுகிறது மேலும் நாம் உண்ணும் உணவு வழியாகவும் பரவும்.
இது தொற்று பாதிப்பால் குமட்டல் ,வாந்தி ,வயிற்றுப் பகுதியில் வலி ,வயிற்றுப் போக்கு ஏற்படுதல் போன்றவை ஏற்படும். மேலும் உடல்நிலை மிகவும் மோசமாக்கிவிடும். இந்த அறிகுறிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் இருக்கும். ஆனால் இதனால் அதிக பாதிப்பு ஏற்படாது.
நோரோ வைரஸ் தாக்கம் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியது,இந்த வைரஸ் தொற்று குறித்து யாரும் அதிகம் பயப்பட வேண்டாம் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், வைரஸ் தொற்று பாதித்த இரண்டு சிறுவர்களின் உடல் நிலை சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்..