சமையல் குறிப்புவாழ்க்கை முறை

அசைவ முறையில் காலிபிளவர் கிரேவி செய்து அசத்துங்க..!!

அசைவ முறையில் காலிபிளவர் கிரேவி செய்து அசத்துங்க. காலிபிளவர் என்றாலே பலருக்கும் சில்லி தான் பிடிக்கும். சில்லி செய்வதற்கு பதிலாக இந்த அசைவ குழம்பு போல் கிரேவியாக செய்வதால் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கிரேவி சூடான சாதம், தோசை, சப்பாத்தி, பூரிக்கு சைடிஷாக செய்து கொடுங்க. பிறகு பாருங்க இன்னும் வேணும் என்று சாப்பிட தூண்டும். அடிக்கடி இந்த கிரேவியை செய்ய சொல்வாங்க.

மேலும், காலிபிளவர் பற்றிய காய்கறியில் ஒரு பூ வகை அது என்ன..??? காய்களில் மலர்ச்சியை தரும் இந்த காலிபிளவர் இதன் நன்மைகளை இந்த லிங்கில் கொடுத்திருக்கிறேன். தெரிந்து கொள்ள இதை படிங்க.

பெரிய காலிபிளவர் பிரஷா வாங்கி வந்ததும் செய்ங்க. பிரிட்ஜில் வைத்து பிறகு செய்யலாம்னு வைக்காதிங்க. பூவின் டேஸ்ட் மாற கூடும். காம்பை நீக்கி விட்டு பொடி பொடி பூவாக கையில் பிய்த்தாலே வரும். விரும்பிய வடிவில் எடுத்து வச்சுக்கோங்க. ஒரு பாத்திரத்தில் பூ முங்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இந்த பூவை போட்டு வேக வைத்து, அதில் மஞ்சள் தூள் சிறிது உப்பு போட்டு சிறிது நேரம் வைத்து விடுங்கள். அந்த நீரை வடித்து விடுங்கள். நீரில் அதிலுள்ள பேட் ஸ்மெல் போய்விடும். திரும்ப வேற தண்ணீர் ஊற்றி ஒரு தடவை அலசி விட மீதி உள்ள பச்சை ஸ்மெல் போய்விடும்.

காலிபிளவர் கிரேவி

காலிபிளவர் கிரேவி : ஒரு கடாயில் ஆயில் விட்டு தனியா, முந்திரி, வரமிளகாய், தேங்கா துருவல் சேர்த்து வதக்கி சிறிது பொட்டுக்கடலை சேர்த்து மையாக அரைத்து எடுத்து வச்சுக்கோங்க. இஞ்சி, பூண்டு பேஸ்ட் ரெடி பண்ணிக்கோங்க. வெங்காயம், தக்காளி பொடிசா கட் செய்து வைங்க.

இன்னோரு வாணலியில் ஆயில் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஒவ்வென்றாக போட்டு வதங்கியதும், வெங்காயம், தக்காளி சாப் பண்ணத ஒவ்வென்றாக போட்டு நன்றாக வதங்க விடுங்க. பச்சை வாசனை போகட்டும். பிறகு இஞ்சி,பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து ஆயிலில் சிறிது வதங்க விடுங்க. இப்போ காலிபிளவர் சேர்த்து வதங்க விட்டு தேவையான தண்ணீர் விடுங்க.

கிரேவிக்கு தகுந்த தண்ணீர் சேர்த்து கொதித்ததும், வறுத்து அரைத்த மசாலாவை சேர்த்து, கொதித்ததும் கிரேவி பதம் வந்தது கொத்தமல்லி தூவி இறக்குங்க. சுட சுட கமகமக்கும் காலிபிளவர் அசைவ கிரேவி தயாராகி விட்டது. சாப்பிட தயாரா இருந்தா நீங்களும் இத செஞ்சு பாருங்க. சில்லி செய்வதற்கு பதிலாக இந்த அசைவ குழம்பு போல் கிரேவியாக செய்வதால் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க.

மேலும் படிக்க

அசத்தலான சட்னி வகைகள்..!! உங்க வீட்டு சுட்டீஸ்காக..!!

கூட்டத்தில பயணம் போறீங்களா? இது உங்களுக்குதா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *