நோ சூடு நோ சொரனை
கலிகாலத்தில் நல்லவர்கள் வாழ்வது மிக கடினமான ஒரு செயலாக மாறிவிட்டது. எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், அந்த மனிதரை தன்வசப்படுத்தி விடுகின்றனர் கலியுக திருடர்கள். அந்த மனிதர்களும் நல்லவனாக வாழ முடியாது என்கின்ற நம்பிக்கையுடன் வாழ ஆரம்பித்து விடுகின்றான்.
உடனடி என்னும் மாயை
இப்படிப்பட்ட நம்பிக்கை உருவாவதற்கான முக்கிய காரணமே, ‘இப்பொழுதே செய்ய வேண்டும் என்கின்ற மாயைதான்’. கொடுஞ்செயல் செய்பவர்கள் நல்ல மனிதர்களை தன் வலையில் வீழ்த்துவதற்கு இதையே தூண்டிலாக பயன்படுத்துகிறார்கள். அந்த மனிதரை சிறிதளவும் யோசிக்க விடாமல் பெரும்பாலான மக்கள் கூட்டம் கூறுவதே சரி என்ற பிம்பத்தை காட்டுகிறார்கள். அதனால் எல்லோரும் செய்வதை நீயும் செய்ய வேண்டும், அதையும் இப்பொழுதே உடனடியாக செய்ய வேண்டும் என்ற மாய வலைக்குள் சிக்க வைத்து விடுகின்றனர். அந்த மனிதர்களும் சற்றும் யோசிக்காமல் தாங்கள் இருந்த கோட்டை விட்டுவிட்டு, அக்கரைக்கு பச்சையாக தெரியும் ஏதோ ஒரு புல்லை மேய ஆரம்பித்து விடுகின்றனர்.
சூடு சொரனை
இந்த காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த காரணங்களுக்கு தூண்டுதலாக இருப்பது ‘அந்த மனிதர்களின் சிறுபருவ வளர்ப்பே’. சிறு குழந்தையில் இருந்து அவர்களை சுற்றி இருப்பவர்கள், இது தவறு, அது தவறு, இதை செய்ய கூடாது, அதை செய்ய கூடாது என்ற பயமுறுத்தலால் இப்படிதான் வாழ வேண்டும் என்று தனக்குத்தானே போர்வை போட்டுக்கொண்டு வாழ ஆரம்பித்து விடுகிறது
நல்லவர்கள் படும் அவமானங்கள்:
சூடு, சொரனை, வெட்க்கம், மானம், ரோஷத்தோடு வளர்க்கப்படும் குழந்தைகளால் இந்த சமுதாயத்தை சமாளிக்கும் ஆற்றலலை இழந்துவிடுகிறது. மீண்டும் அதை உடைத்தெறியும் வழிகளை தேடி தேடி அழைகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே தவறான துணையை தேர்ந்தெடுத்து, இதுவே சரி என்ற இரண்டாவது போர்வையை போர்த்திக் கொள்கிறது.
அப்படியென்றால் வெட்க்கம் மானம் இருக்க கூடாதா?
இப்படி வாழ்ந்தால், எதற்கும் கோவம் வராதே, யார் எவ்வளவு காயப்படுத்தினாலும் சிரித்துக்கொண்டே சென்றுவிட வேண்டுமா என்று கேட்டால்,
அப்படியில்லை.
இங்கு எதற்கு நம் மானத்தையும், ரோஷத்தையும் காட்ட வேண்டுமோ அதற்கு காட்டுவதில்லை. உதாரணத்திற்கு கண் முன்னே ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆட்படுத்தப்படுகிறாள் என்றால், நமக்கு எதற்கு வம்பு என்று விட்டுவிடுகிறோம். ஆனால், அரசியல் களங்களில் எவரேனும் ஐநூறு ரூபாய் கொடுத்தால், எப்படிப்பட்ட ஆட்சி அமையப்போவதாக இருந்தாலும், பற்களை காட்டிக்கொண்டு ரோஷத்தை இழந்து மனிதன் செயல்பட ஆரம்பித்து விடுகிறான். ஆகவே மானம், ரோஷத்தை காட்ட வேண்டிய இடத்தில் காட்டாமல், எங்கு காட்டக்கூடாதோ அங்கு மனிதன் காட்டிக்கொண்டு இருக்கிறான்.